பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
நிதிஷ் குமார் தனது சொந்த ஊரான பாட்னாவின் பக்தியார்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நேற்று பங்கேற்றார். அங்குள்ள சபார் மருத்துவமனை வளாகத்தில், விடுதலை போராட்ட வீரர் ஷில்பத்ரா யாஜியின் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்.
அப்போது பாதுகாவலர்களைப் போன்று உடை அணிந்திருந்த ஒருவர் ஓடிச் சென்று நிதிஷ்குமாரை தாக்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாவலர்கள் அந்த நபரை பிடித்து அடி உதை கொடுத்தனர்.
இதையும் படிங்க - இந்தியாவில் மலர்ந்த காதல்... டெல்லி வழக்கறிஞரை கரம்பிடிக்கும் உக்ரைன் இளம்பெண்...
அப்போது அவர்களை தடுத்த நிதிஷ் குமார், அவரை அடிக்காதீர்கள், அவர் என்ன சொல்கிறார் என்பதை கேளுங்கள் என்று அறிவுறுத்தினார். முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியவரின் பெயர் சங்கர் ஷா என்பதும் அவர் அபு மஹ்மத்பூரில் நகைகைக்கடை நடத்திவருவதும் தெரியவந்தது.
மேலும் அவருக்கு மன நல பாதிப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க - கணவனை மரத்தில் கட்டி வைத்து மனைவியை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம்...
முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பை மீறி மன நலம் பாதித்தவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதுகாப்பு குறைபாட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் அரசு எச்சரித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ், முதல்வர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தங்களது எதிர்ப்பை ஜனநாயக முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்றும், இதுபோன்று தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.