ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஏடிஎம் கொள்ளை.. சாலையில் வீசப்பட்ட பணம்.. சினிமா பாணியில் மடக்கி பிடித்த போலீசார்..!

ஏடிஎம் கொள்ளை.. சாலையில் வீசப்பட்ட பணம்.. சினிமா பாணியில் மடக்கி பிடித்த போலீசார்..!

ஏடிஎம்மில் கொள்ளையடித்த நபர்கள்

ஏடிஎம்மில் கொள்ளையடித்த நபர்கள்

சினிமா பாணியில் நடைபெற்ற போலீசாரின் அதிரடி நடவடிக்கை தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது. விரைந்து செயல்பட்டு கொள்ளையர்களை அதிரடியாக கைது செய்த போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டம் கோரண்ட்லாவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம் மையம் உள்ளது. இன்று அதிகாலை ஏடிஎம் மையத்தின் கதவை திறந்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நான்கு பேர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதிலிருந்த 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பைகளில் நிரப்பி எடுத்து கொண்டு வெளியில் சென்றனர்.

ஏடிஎம் மையத்திற்குள் கொள்ளையர்கள் புகுந்து இருப்பதை பார்த்த சிலர் உடனடியாக போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தனர்.பணத்துடன் கொள்ளையர்கள் நான்கு பேர் வெளியில் வந்து கொண்டிருந்த அதே நேரத்தில் போலீசார் அங்கு வந்து சேர்ந்தனர்.

கொள்ளையர்களை பார்த்தவுடன் போலீசார் அவர்களை விரட்டி சென்றனர். அப்போது கொள்ளையர்கள் பணப்பையை வீசிவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர். இதனால் பையில் இருந்த பணம் சாலையில் சிதறி காற்றில் பறக்க துவங்கியது.

கொள்ளையர்கள் நான்கு பேரையும் மடக்கி பிடித்த போலீசார் சாலையில் சிதறி காற்றில் பறந்த பணம் முழுவதையும்  சேகரித்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக  வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

சினிமா பாணியில் நடைபெற்ற போலீசாரின் அதிரடி நடவடிக்கை தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது. விரைந்து செயல்பட்டு கொள்ளையர்களை அதிரடியாக கைது செய்த போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

First published:

Tags: Telangana, Theft