ஆந்திராவில் யூடியூப் பார்த்து ஏடிஎம்-ல் நூதன கொள்ளை.. கொள்ளையடித்தது எப்படி?

ஆந்திராவில் யூடியூப் பார்த்து ஏடிஎம்-ல் கொள்ளை..

ஆந்திர மாநிலத்தில் யூடியூப் பார்த்து ஏடிஎம் இயந்திரத்தில் 77 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 2 கொள்ளையர்கள் சிக்கியுள்ளனர். மிளகாயப் பொடி துாவி கொள்ளையடித்தது எப்படி?

 • Share this:
  ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாசேப்பள்ளி பகுதியில் நாராயணபுரத்தில் பாரத ஸ்டேட் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் ஒரு பக்கத்தில் ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 21ஆம் தேதி நள்ளிரவு ஏடிஎம் மையத்தில் நுழைந்த மர்ம நபர்கள் சிசிடிவி இணைப்பைத் துண்டித்துள்ளனர். பின்னர் கேஸ் கட்டர் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி, அதில் இருந்த 77 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக அங்கிருந்த மற்றொரு சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தடயங்கள் தெரியாமல் இருப்பதற்காக மிளகாய்ப் பொடி துாவப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திர போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரயாலகூடாவைச் சேர்ந்த 21 வயதான பிரசாத் மற்றும் 37 வயதான வினய் ராமுலு ஆகிய இருவரும் சிக்கினர். இவர்கள் ஏற்கனவே இதுபோன்ற பல கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

  அதேநேரம், தடயங்கள் இல்லாமல் ஏடிஎம்மை எப்படி கொள்ளையடிப்பது என்பதை யூடியூபில் பல வீடியோக்கள் பார்த்து தெரிந்து கொண்டுள்ளனர். அதன்பின்னர், ஆள்நடமாட்டம் குறைந்த, உள்ளடங்கிய பகுதிகளில் உள்ள வங்கிகளை நோட்டமிட்டு அவற்றில் நாராயணபுரத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மைத் தேர்வு செய்து கொள்ளையடித்துள்ளனர்.

  மேலும் படிக்க...Karthigai Deepam 2020: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது (படங்கள்)

  அதன்பின்னர் கைதானவர்களிடம் இருந்து, 77 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் அவர்களைக் கைது செய்து வேறு எந்தெந்த கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: