• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பழைய டெபிட் - கிரெடிட் கார்டுகள் அடுத்தாண்டு முதல் செல்லாது!

பழைய டெபிட் - கிரெடிட் கார்டுகள் அடுத்தாண்டு முதல் செல்லாது!

கிரெடிட் - டெபிட் கார்டு

கிரெடிட் - டெபிட் கார்டு

பாதுகாப்பு அம்சம் நிறைந்த சிப் பொருத்திய கிரெடிட் மற்றூம் டெபிட் கார்டுகளை வழங்கும்படி ரிசர்வ் வங்கி, அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
2019 ஜனவரி 1-ம் தேதி முதல் பழைய தொழில்நுட்பத்திலான டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டில் சமீப காலமாக டெபிட்- கிரெடிட் கார்டுகள் மூலலமாக ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. இதை தடுக்கும் நோக்கில், அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 'சிப்' பொருத்தப்பட்ட புதிய டெபிட் - கிரெடிட் கார்டுகளை வழங்கும்படி, 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

அந்த உத்தரவில் தற்போது உள்ள பெரும்பாலான கிரெடிட் கார்டுகளின், பின்புறத்தில் மேக்னடிக் ஸ்டிரைப் எனும், காந்தக்கோடுகள் உள்ளன. அதை மாற்றிவிட்டு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சிறிய மின்னணு சிப் பொருத்திய கார்டுகளை வழங்கும்படி ரிசர்வ் வங்கி ஏற்கெனவே கெடு விதித்திருந்தது.

கோப்புப் படம்


தற்போது, சில வங்கிகள் மட்டுமே இந்த சிப் வைக்கப்பட்ட கார்டுகளை வழங்கியுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சிப் வைக்கப்பட்ட கார்டு வழங்குவதற்கான காலக்கெடு வருகிற டிசம்பர் 31-ம் தேதி முடிவடைகிறது.

அதன்பிறகு, பழைய கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் செல்லாமல் போகக்கூடும். ஜனவரி 1-ம் தேதி நெருக்கத்திலேயே, காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்பது தெரியவரும். எனினும், பல வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய கார்டுகளை வழங்கி வருகின்றனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: