விளையாட்டு வீரர்கள் கடத்தல்... முன்னாள் பெண் அமைச்சர் கைது

விளையாட்டு வீரர்கள் கடத்தல்... முன்னாள் பெண் அமைச்சர் கைது

முன்னாள் அமைச்சர் அகில ப்ரியா

ஐதராபாத்தில் உள்ள பிரவீன் வீட்டிற்கு இரண்டு கார்களில் சென்ற 15 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டனர்

 • Share this:
  ஐதராபாத்தில் உள்ள 50 ஏக்கர் நிலம் விவகாரம் தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உறவினரான இந்திய பேட்மிட்டன் அணியின் முன்னாள் ஆட்டக்காரர் பிரவீன் ராவ் மற்றும் அவரது சகோதரர்கள் இரண்டு பேர் ஆகியோர் கடத்தப்பட்ட வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் அகில ப்ரியா, அவருடைய கணவர் பார்கவ்ரெட்டி ஆகியோரை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.

  தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் நெருங்கிய உறவினரான பிரவீன் ராவ் குடும்பத்திற்கு சொந்தமான 50 ஏக்கர் நிலம் ஹைதராபாத் அபிட்ஸ் பகுதியில் உள்ளது. இந்த நிலம் தொடர்பான விவகாரம் ஒன்று கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

  நில விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியை சார்ந்தவரான ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் அகில ப்ரியா, அவருடைய கணவர் பார்கவ் ரெட்டி ஆகியோர் தலையிட்டு பஞ்சாயத்து செய்து வந்ததாக தெரிய வந்துள்ளது.

  இந்த நிலையில் நேற்று இரவு ஐதராபாத்தில் உள்ள பிரவீன் வீட்டிற்கு இரண்டு கார்களில் சென்ற 15 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். பின்னர் பிரவீன் ராவ், அவருடைய சகோதரர்களான நவீன் ராவ்,சுனில் ராவ் ஆகியோரிடம் விசாரணை செய்வது போல் நடித்த 15 பேரும் வீட்டில் இருந்த பெண்களை தனி அறையில் அடைத்து பூட்டி வைத்தனர்.
  தொடர்ந்து சகோதரர்கள் 3 பேரையும் கார்களில் ஏற்றி கடத்தி சென்றனர்.

  இது தொடர்பாக பிரவீன் ராவ் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட ஹைதராபாத் போலீசார், ஐதராபாத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் ஹைதராபாத் புறநகர் பகுதியில் இரண்டு கார்களை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து இரண்டு கார்களிலும் இருந்த 8 பேரை மடக்கிப் பிடித்த போலீசார் பிரவீன் ராவ் மற்றும் அவரது சகோதரர்களான நவீன் ராவ், சுனில் ராவ் ஆகியோரை மீட்டனர்.

  இது தொடர்பாக சகோதரர்கள் மூன்று பேரையும் கடத்தி சென்று பிடிபட்ட எட்டு பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவர்கள் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர் அகில ப்ரியா, அவருடைய கணவர் பார்கவி ரெட்டி ஆகியோரின் பெயரை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அகில பிரியா, அவருடைய கணவர் பார்கவ் ரெட்டி ஆகியோரையும் கைது செய்த போலீசார் இரண்டு பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: