• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Milkha Singh : இந்தியாவின் பறக்கும் சீக்கியர் மில்கா சிங் உயிரிழப்பு

Milkha Singh : இந்தியாவின் பறக்கும் சீக்கியர் மில்கா சிங் உயிரிழப்பு

மில்கா சிங்

மில்கா சிங்

கொரோனா பாதித்து சிகிச்சைப் பெற்றுவந்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் உயிரிழந்தார். அவருக்கு வயது 91.

  • Share this:
    தற்போது பாகிஸ்தானின் பகுதியாக இருக்கும் கோபிந்த்புரா பகுதியில் 1928-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி பிறந்தவர் மில்கா சிங். நாடு சுதந்திரமடைந்தபோது ஏற்பட்ட பிரிவினையின்போது பாகிஸ்தானில் குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவுக்கு வந்தவர் மில்கா சிங். 1960-ம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் 400 மீட்டருக்கான ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு 4-வது இடத்தைப் பிடித்தார். அவர், 1956, 1964 ஆகிய ஆண்டுகளிலும் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டவர்.

    1958-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் முதல் தங்கம் வென்ற நபர் என்ற சாதனையைப் படைத்தார். அந்தச் சாதனை 50 ஆண்டுகளுக்கு நீடித்தது. 2010-ம் ஆண்டு வட்டு எறிதல் போட்டியில் கிருஷ்ணா பூனியா தங்கம் வென்றதன் மூலம் அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டது. மில்கா சிங், ஆசியப் போட்டிகளில் கலந்துகொண்டு 4 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் பறக்கும் சீக்கியர் என அன்போடு அழைக்கப்பட்டார். அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.

    மில்கா சிங்குக்கு கடந்த மாதம் 19-ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அதன்பின் ஜூன் 3ம் தேதி அவருக்கு ஆக்ஸிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். கொரோனா பாதிப்பு குணமடைந்து ஐ.சி.யூ பிரிவிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாதாரண பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மில்கா சிங்கின் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அக்ஷய் குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னதாக, மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர் கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: