வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பிகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 83 பேர் உயிரிழந்ததாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதில், அதிகபட்சமாக கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பிகாரை தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும் நேற்று ஒரே நாளில் மின்னல் தாக்கி 24 பேர் , மரணமடைந்துள்ளனர். அவர்களது குடும்பத்திற்கு தலா 4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
பிகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் பலத்த மழை மற்றும் மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.