முகப்பு /செய்தி /இந்தியா / இரு பேருந்துகள் மோதி கோர விபத்து.. 8 பேர் பலி, 30 பேர் படுகாயம்... உ.பியில் பயங்கர சம்பவம்

இரு பேருந்துகள் மோதி கோர விபத்து.. 8 பேர் பலி, 30 பேர் படுகாயம்... உ.பியில் பயங்கர சம்பவம்

சிகிச்சையில் உள்ளவர்களில் மூன்று பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பு தெரிவிக்கிறது.

சிகிச்சையில் உள்ளவர்களில் மூன்று பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பு தெரிவிக்கிறது.

சிகிச்சையில் உள்ளவர்களில் மூன்று பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பு தெரிவிக்கிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரு தனியார் சொகுசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் எட்டுபேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பூர்வாஞ்சல் விரைவு சாலையில் இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள நாரயண்பூர் என்ற கிராமத்தில் இன்று அதிகாலை வேளையில் பீகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற டபுள் டக்கர் பேருந்து சாலை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்து நின்றதை கவனிக்காமல் டெல்லி நோக்கி வேகமாக வந்த மற்றொரு பேருந்து இதன் மீது மோதியுள்ளது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் பேருந்து கடும் சேதம் அடைந்த நிலையில், இரு பேருந்தில் பயணத்தவர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். விபத்தில் தற்போது வரை எட்டு பேர் உயிரிழந்த நிலையில், 30 பேர் படுகாயம் அடைந்து லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு அருகே உள்ள பார்பங்கி பகுதி காவல்துறையினர் விரைந்துள்ளனர். இது தொடர்பாக பார்பங்கி காவல் கண்காணிப்பாளர் அனுராக் வாட்ஸ் கூறுகையில், படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை துரிதமாக வழங்கப்படுகிறது. மூன்று பேர் இதில் கவலைக்கிடமாக உள்ளனர். எட்டு பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இரும்பு சங்கிலியால் கட்டிப்போட்டு மனைவி பாலியல் பலாத்காரம்... நண்பருடன் தொழிலதிபர் கைது

இந்த விபத்திற்கு உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.இந்த விபத்து தனக்கு பெரும் அதிர்ச்சி, கவலை தருவதாக கூறிய அவர், மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.மீட்புப் பணியில் காவல்துறையுடன் உள்ளூர் வாசிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

First published:

Tags: Bus accident, Expressway, Uttar pradesh, Yogi adityanath