Home /News /national /

திகார் சிறை அதிகாரிகளுக்கு மாதம் ₹ 1 கோடி லஞ்சம்; 12 நடிகைகளுடன் பார்ட்டி - சுகேஷ் சந்திரசேகர் அட்ராசிட்டி

திகார் சிறை அதிகாரிகளுக்கு மாதம் ₹ 1 கோடி லஞ்சம்; 12 நடிகைகளுடன் பார்ட்டி - சுகேஷ் சந்திரசேகர் அட்ராசிட்டி

Sukesh chandrasekar - Leena maria paul

Sukesh chandrasekar - Leena maria paul

சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறைக்குள் செல்வாக்காக வாழ அதிகாரிகளுக்கு மாதம் மாதம் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் அளித்திருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தகவல்

  சுகேஷ் சந்திரசேகரை நினைவிருக்கிறதா? அதிமுக பிளவுபட்டிருந்த போது இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தருவதாக டிடிவி தினகரனிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசி சிக்கி தமிழகத்தில் பிரபலமானவர். இவர் தனது காதலியும் நடிகையுமான லீனா மரியா பாலுடன் சேர்ந்து சென்னையில் கனரா வங்கியில் 19 கோடி ரூபாய் மோசடி செய்தது, மும்பையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி என நாடு முழுவதும் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி கைதாகி தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதும் சுகேஷ் சந்திரசேகர் தனது மோசடியை சிறையில் இருந்தவாறே அரங்கேற்றியிருப்பது தான் சமீபத்திய ஹாட் டாபிக். பிரபல தொழிலபதிபர்களின் மனைவிகளை Mobile number spoofing என்ற தொழில்நுட்ப ரீதியாக மோசடி செய்து உள்துறை அமைச்சக தொடர்பு இருப்பதாக சித்தரித்து 200 கோடி ரூபாய் மோசடி செய்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவருக்கும் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுடசுக்கும் இடையே இருந்த பழக்கமும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  சுகேஷ் சந்திரசேகர் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் அம்பலமாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், திகார் சிறையில் பல்வேறு வசதிகளுடன் ராஜ வாழ்க்கையை அவர் வாழ்ந்து வந்ததாகவும், பல்வேறு பாலிவுட் நடிகைகள் அவரை திகார் சிறையில் சந்தித்து சென்றதும், அங்கேயே பார்ட்டி நடத்தியதும், சிறைக்குள் செல்வாக்காக வாழ அதிகாரிகளுக்கு மாதம் மாதம் ஒரு கோடி ரூபாய் லஞ்சம் அளித்திருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

  இதையும் படிங்க:  படுபயங்கரமான தொழில்நுட்ப மோசடிக்கு இலக்கான பாலிவுட் நடிகை.. Mobile Number Spoofing என்றால் என்ன? - அதிர்ச்சி பின்னணி

  பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சுகேஷ் சந்திரசேகர், சிறையில் தனக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுப்பதற்காகவும், தொடர்ந்து அவற்றை அனுபவிப்பதற்காகவும் மாதம் மாதம் ஒரு கோடி ரூபாய் லஞ்சமாக அளித்திருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதால் சிறைக்குள் பல்வேறு வசதிகளுடன் கூடிய ஒரு அலுவலகத்தையே சுகேஷுக்காக அதிகாரிகள் அமைத்துக் கொடுத்திருக்கின்றனர். இந்த அலுவலகத்தில் ஃபிரிட்ஜ், டிவி, சோஃபா, மினரல் வாட்டர் பாட்டில்கள் என என்னற்ற சொகுசு சமாச்சாரங்கள் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுகேஷின் காதல் மனைவி லீனா, சிறையின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடாமலே நேராக சுகேஷின் அலுவலகத்துக்கு அடிக்கடி சென்று அவரை சந்தித்து வந்ததாகவும் லீனா பால் தனது வாக்குமூலத்தில் வெளிப்படுத்தியிருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

  இதையும் படிங்க:  3 டோஸ் தடுப்பூசி போட்டும் 29 வயது இளைஞருக்கு ஓமைக்ரான் பாதிப்பு - பகீர் தகவல்

  இது தவிர பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், நோரா ஃபாதேஹி உள்ளிட்ட 12 பாலிவுட் நடிகைகள், மாடல்கள் சுகேஷை சிறையில் இருக்கும் அவரின் அலுவலகத்துக்கு சென்று சந்தித்து திரும்பியதாகவும் தற்போது தெரியவந்துள்ளது. சிறைக்குள்ளேயே அவர் பார்ட்டி நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

  இதற்கிடையே சுகேஷ் தரப்பில் திகார் சிறை நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கும் கடிதத்தில், தான் சிறையில் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், ஏற்கனவே சிறை மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் எனக்கு மேலும் மனரீதியாக நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும், தனது மனைவி லீனா மரியா பாலை சிறை விதிகளின்படி சந்திக்க அனுமதிக்கப்படவில்லை எனவும், 4 சிசிடிவி கேமராக்கள் மூலம் தான் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

  இதையும் படிங்க: ஒமைக்ரானால் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படலாம் - தடுப்பூசி தேவை

  சுகேஷ் சந்திரசேகர் விவகாரத்தில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.
  Published by:Arun
  First published:

  Tags: Bollywood, Tihar

  அடுத்த செய்தி