23 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனான பந்தத்தை உடைத்து பாஜகவில் இணைந்தார் சிசிர் அதிகாரி!

23 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனான பந்தத்தை உடைத்து பாஜகவில் இணைந்தார் சிசிர் அதிகாரி!

சிசிர் அதிகாரி

23 ஆண்டுகளால திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வரும் சிசிர் அதிகாரி, Contai தொகுதியின் எம்.பியாக கடந்த 2009 முதல் இருந்து வருகிறார். மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சராக சிசிர் அதிகாரி இருந்துள்ளார். இவருடைய மற்றொரு மகன் தீபேந்து அதிகாரியும் திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
சுவேந்து அதிகாரியின் தந்தையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமான சிசிர் அதிகாரி, அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். திரிணாமுல் காங்கிரஸின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த அரசியல் குடும்பத்தின் மையப் புள்ளியாக இருப்பவர் சிசிர் அதிகாரி, இவரின் வருகை மேற்குவங்கத்தில் பாஜகவை மேலும் வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தளபதியாக திகழ்ந்தவர் சுவேந்து அதிகாரி, மம்தாவுடனான மனக்கசப்பு காரணமாக கடந்த ஆண்டு இறுதியில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அது முதலே திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வரிசையாக தலைவர்கள் பாஜகவிற்கு சாரை சாரையாக படையெடுத்து வந்தனர்.

ஒரு காலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக திகழ்ந்த மேற்குவங்கத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றுவதற்கு அடித்தளமாக அமைந்தது நந்திகிராமில் நடைபெற்ற போராட்டம் தான். இப்போராட்டத்தில் மம்தாவுக்கு பக்கபலமாக இருந்தது சுவேந்து அதிகாரியின் குடும்பத்தினர் தான். மெதின்பூர், பங்குரா மற்றும் புருலியா என 3 மாவட்டங்களில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மேல் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவது சுவேந்து அதிகாரியின் குடும்பம் தான். இதனிடையே நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் மம்தா பானர்ஜி, சுவேந்து அதிகாரி என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.

சுவேந்து அதிகாரி பாஜகவில் இணைந்த பின்னர் திரிணாமுல் காங்கிரஸின் தூணாக திகழ்ந்த அவருடைய தந்தையும் அக்கட்சியின் எம்.பியுமான சிசிர் அதிகாரி பாஜகவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக மேற்குவங்க மாநிலம் புர்பா மெதின்பூர் மாவட்டத்தில் உள்ள எக்ரா எனும் பகுதியில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிசிர் அதிகாரி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

பாஜகவில் இணைந்த சிசிர் அதிகாரி கூறுகையில், “என் மகன் நிச்சயம் நந்திகிராமில் வெற்றி பெறுவார், அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த தேர்தல் எங்களுக்கு கவுரவ யுத்தம் போன்றது.

சுவேந்துவை துரோகி என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளது குறித்து சிசிர் அதிகாரி கூறுகையில், “இன்று மேற்குவங்கத்தில் நடந்துகொண்டிருக்கும் அனைத்துக்கும் மம்தா பானர்ஜி தான் பொறுப்பு. எங்களை துரோகிகள் என கூறுகிறார். அவர் தான் திரிணாமுல் காங்கிரஸ் எனும் கம்பெனியின் முதலாளி, அவர் என்ன வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் இது போன்ற குற்றச்சாட்டுகள் அவருக்கு எந்த நன்மையும் கொண்டுவரப்போவதில்லை. சுவேந்து தான் நந்திகிராமில் வெற்றி பெறப்போகிறார். அனைவரும் இதனை அறிவார்கள்” என்றார்.

23 ஆண்டுகளால திரிணாமுல் காங்கிரஸில் இருந்து வரும் சிசிர் அதிகாரி, Contai தொகுதியின் எம்.பியாக கடந்த 2009 முதல் இருந்து வருகிறார். மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சராக சிசிர் அதிகாரி இருந்துள்ளார். இவருடைய மற்றொரு மகன் தீபேந்து அதிகாரியும் திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: