• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விமானப்படைத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்: சுஷ்மா சுவராஜ் மகிழ்ச்சி

விமானப்படைத் தாக்குதல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம்: சுஷ்மா சுவராஜ் மகிழ்ச்சி

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

இந்திய விமானப் படையின் தாக்குதலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சி என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்த இந்திய விமானப்படை விமானம் அதிரடி தாக்குதலை நடத்தியது. தீவிரவாதிகள் முகாம் மீது 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1,000 கிலோ வெடிகுண்டு வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 300 பேர் வரை இறந்திருக்கலாம் என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகிவருகின்றன. இந்தியாவின் தாக்குதலுக்கு, பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்திய விமானப்படையின் தாக்குதலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பாராட்டி வருகின்றனர்.

    ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் விமானப்படையினர் தாக்குதல் நடத்தியது குறித்து விவரிக்க, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார். இதில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

    அனைத்துக்கட்சி கூட்டத்தின் முடிவில் சுஷ்மா சுவராஜ் பேசும்போது, தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா நடத்திய தாக்குதலுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

    இதுதொடர்பாகப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ‘‘தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆதரவு எப்போதும் இருக்கும். விமானப்படையின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். குடிமக்கள் யாரும் பாதிக்கப்படாமல் தாக்குதல் நடத்தியது பாராட்டுக்குரியது’’ என்று தெரிவித்தார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: