2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றுள்ள 539 உறுப்பினர்களில் 43 சதவீதத்தினர் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினர்களாக சென்றவர்களை விட நடப்பு ஆண்டில் 26 சதவீதத்தினர் மீது குற்ற வழக்குகள் அதிகமாக உள்ளன.
இதற்காக 539 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து ஆய்வு செய்த போது 233 உறுப்பினர்கள் என 43 சதவீதத்தினர் மீது குற்ற வழக்குகள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
அதிகபட்சமாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 116 (39%) குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் 29 (57%), ஜேடியூ 13 (81%), திமுக 10 (43%) மற்றும் திருனாமுல் காங்கிரஸ் கட்சி 9 (51%) என கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில் 29 சதவீத வழக்குகள் பாலியல் வன்புணர்வு, கொலை, கொலை முயற்சி அல்லது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் என்றும் கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 109 சதவீதம் அதிகரித்துள்ளது.
29 வெற்றியாளர்கள் மீது வெறுக்கத்தக்க பேச்சு காரணமாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்ற உறுப்பினர்களில் 185 நபர்கள் மீது குற்ற வழக்குகளும், 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தீவிரமான குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
மேலும் பார்க்க:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Criminal case, Election Result, Parliament