இந்தியாவின் முதல் உறை பனி ஏரி மாரத்தான் போட்டி லாடாக்கில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை இந்திய ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லை படையினர் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவின் இயற்கை எழில் கொஞ்சும் பிரம்மாண்ட அழகை வைத்திருக்கும் பகுதிகள் பல இமயமலைத் தொடர்களில் உள்ளன. இந்த வெள்ளிப் பனிமலைத் தொடர்களில் பல்வேறு தனித்துவமான இயற்கை அமைப்புகள் உள்ளன. அதேவேளை, சமீப காலமாகவே காலநிலை மாற்ற பிரச்சனையால் இமயமலை தொடர்களில் உள்ள இயற்கை அமைப்புகள் கடும் சவாலை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணர்வை கருத்தில் கொண்டு நாட்டின் உறைபனி ஏரி(Frozen Lake) மாரத்தான் லாடக்கில் பாங்காங் சோ பகுதியில் நடைபெறவுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 13,862 அடி உயரத்தில் நடைபெறவுள்ள இந்த மாரத்தான் ஓட்டத்தின் மொத்த தூரம் 21 கிமீ ஆகும். உலகின் மிக உயரமான பகுதியில் நடைபெறும் உறை ஏரி மாரத்தான் என்ற பெருமையை இந்த மாரத்தான் பெறவுள்ளது.
லுகுங்கு என்ற பகுதியில் தொடங்கி மான் என்ற கிராமத்தில் இந்த மாரத்தான் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறும் இந்த மாரத்தான் போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வீரர்கள் 75 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். லடாக் ஆட்சி நிர்வாகம், சுற்றுலாத்துறை, லே மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த மாரத்தான் போட்டிகள் நடைபெறுகிறது.
போட்டியில் பங்கேற்பவர்களுக்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளாக மருத்துவ குழு, ஹெலிக்காப்டர், பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கால நிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் மாரத்தான், இப்பகுதியின் சுற்றுலா வளர்ச்சிக்கும் உதவும் எனத் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.