Home /News /national /

ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் செயல்திறன் 3 மாதங்களில் குறையும்- சொல்கிறது, லான்செட் ஆய்வு

ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் செயல்திறன் 3 மாதங்களில் குறையும்- சொல்கிறது, லான்செட் ஆய்வு

மாதிரி படம்

மாதிரி படம்

ஆக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் செயல் திறன், வலிமை 3 மாதங்களில் குறையத் தொடங்குவதாக லான்செட் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஆக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் செயல் திறன், வலிமை 3 மாதங்களில் குறையத் தொடங்குவதாக லான்செட் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்தில் இருந்து பெறப்பட்ட புள்ளவிவரங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்புடன் இருக்க பூஸ்டர் டோஸ் அவசியம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுதும் ஓமைக்ரான் பரவி வருவதையடுத்து பூஸ்டர் டோஸ்கள் பற்றி பேசப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் சீரம் நிறுவனம் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா இணைந்துதான் கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரித்து வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்காட்லாந்தில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்திய 20 லட்சம் மக்கள், பிரேசிலில் 4.20 கோடி மக்கள் ஆகியோரின் தரவுகளை அடிப்படையாக வைத்து ஆய்வாளர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

    ஸ்காட்லாந்தைப் பொறுத்தவரை, 2-வது டோஸ் தடுப்பூசிசெலுத்தியபின் 2 வாரங்களுக்குப்பின், கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவு 5 மடங்கு அதிகரிக்கிறது, சில நேரங்களில் 2 தடுப்பூசி செலுத்தியவர்களிடையே 5 மாதங்களுக்குப் பின் உயிரிழப்பும் ஏற்படுகிறது என்று என்று லான்செட் ஆய்வு தெரிவிக்கிறது.

    இதையும் படிங்க: ஒமைக்ரான் பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்? பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை

    அதாவது 2வது தடுப்பூசி செலுத்திய பின் 3 மாதக் காலக்கட்டத்தில் அதன் செயல்திறன் குறைவதால் மீண்டும்ம் கொரோனா தொற்று ஏற்படுகிறது. ஸ்காட்லாந்து மற்றும் பிரேசிலில் 2-வது டோஸ்தடுப்பூசி செலுத்தி 4 மாதங்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதும், சில நேரங்களில் உயிரிழக்கும் ஆபத்தும் அதிகரித்துள்ளது என லான்செட் ஆய்வு கூறுகிறது.

    ஆக்ஸ்போர்ட்- அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் செயல்தின் குறைகிறது என கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி, அதிகபட்ச பாதுகாப்பை வழங்க மத்திய அரசு முயல வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

    இதையும் படிங்க: IPL 2022| ஐபிஎல் 2022 மெகா ஏலம் தள்ளி வைப்பு- டிசம்பரில் இல்லை- எப்போது?

    ஸ்காட்லாந்து மற்றும் பிரேசிலில் உள்ள மக்கள் முதல் மற்றும் 2-வது தடுப்பூசிக்கு இடையே 12 வாரங்கள் இடைவெளியில்தான் செலுத்தினர். அப்போது ஸ்காட்லாந்தில் டெல்டா வைரஸும், பிரேசிலில் காமா வைரஸும் உச்சத்தில் இருந்தன. வைரஸ்களின் உருமாற்றத்தின் தாக்கம் காரணமாக தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Astrazeneca, Covid-19 vaccine

    அடுத்த செய்தி