மேகதாது திட்ட அறிக்கை ஆய்வு- கர்நாடகாவுக்கு நீதி கிடைக்கும்: மத்திய் நீர்வளத்துறை அமைச்சர் செகாவத் பேச்சு!

கஜேந்திர சிங் செகாவத்

மேகதாது அணை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஜல் ஜீவன் திட்டம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் பிற அமைச்சர்களுடன்  மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஆலோசனை மேற்கொண்டார்.

  • Share this:
    மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்ய இருப்பதாகவும் கர்நாடகாவுக்கு உரிய நீதி கிடைக்கும் என அம்மா நில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு உறுதியளித்ததாகவும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடக அரசின் செயலால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடிய சூழலில், இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை தமிழக  நீர்வளத்துறை அமைச்ச ர் துரைமுருகன் சந்தித்து கோரிக்கை வைத்திருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அப்போது தமிழகத்தை கேட்காமல் அணைக்கு அனுமதி தரமாட்டோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உறுதியளித்ததாக துரைமுருகன் தெரிவித்தார்.

    எனினும், மேகதாது அணை கட்டியே தீரப்படும் என கர்நாடகா உறுதியாக தெரிவித்து வருகிறது.  பெங்களூரு நகரத்தின் குடிதண்ணீர் வசதிக்காகவே உச்ச நீதிமன்ற அனுமதியின்படி மேகதாது அணை கட்டப்படுகிறது என்றும், எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறி வருகிறார். அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என நம்புவதாகவும் கூறி வருகிறார்.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில்,  மேகதாது அணைக்கு எதிராக மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது ஒருபுறமிருக்க, ‘ 100 சதவீதம் மேகதாது திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு  கர்நாடக அரசுக்கு நீதி வழங்கும் என்று நம்புகிறோம்’ என  கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஊடகத்துக்கு பேட்டியளித்தார்.

    இதை படிங்க: மேகதாது அணையை கட்டியே தீருவோம்- கர்நாடக உள்துறை அமைச்சர் பிடிவாதம்!


    மேகதாது அணை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஜல் ஜீவன் திட்டம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் பிற அமைச்சர்களுடன்  மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஆலோசனை மேற்கொண்டார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கஜேந்திர சிங் செகாவத்,  மேகதாது திட்டம் உட்பட நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களையும்  ஆய்வு செய்வதாக எடியூரப்பாவுக்கு  மீண்டும் உறுதியளித்தேன்.  கர்நாடகாவுக்கு நீதி கிடைக்கும் என்றும் உறுதியளித்தேன்’ என தெரிவித்தார்.

    மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடகாவுக்கு நீதி கிடைக்கும் என உறுதியளித்திருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கூறியிருப்பது தமிழகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Murugesh M
    First published: