முகப்பு /செய்தி /இந்தியா / இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா

இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா

இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020 (Assisted Reproductive Technology (Regulation) Bill, 2020) கருவுறுதல் கிளினிக்குகள் மற்றும் முட்டை/விந்து வங்கிகளுக்கு குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் நடத்தை விதிகளை அமைக்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா (Assisted Reproductive Technology (Regulation) Bill, 2020)மக்களவையில் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.  நாட்டில் புற்றீசல் போல் பெருகும் செயற்கை கருத்தரிக்கும் மையங்களை கட்டுப்படுத்த இந்த மசோதா வழிவகை செய்கிறது.

இந்தியாவில் அண்மைகாலமாக செயற்கை கருத்தரிக்கும் மையங்கள் புற்றீசல் போல் முளைக்க தொடங்கியுள்ளது.  குழந்தை பெறுவதில் கணவர், மனைவி ஆகியோரிடம் குறைபாடுகள் காணப்படுவது அதிகரித்துள்ள சூழலில், பலரும் வாடகைத் தாய் , செயற்கை கருத்தரிப்பு போன்ற தொழில்நுட்பம் மூலம் குழந்தை பெற்றுகொள்ள ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

இதனால், செயற்கை கருத்தரிக்கும் மையங்கள் அபரிமிதமாக வளர்ச்சி பெற தொடங்கியது. எனினும், வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவற்றை அவை சரியாக பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. இதையடுத்து தானம் செய்பவர், தம்பதி மற்றும் குழந்தை ஆகியோரின் உரிமையை பாதுகாக்கும் விதமாக இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020ஐ கடந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

கருவுறுதல் கிளினிக்குகள் மற்றும் முட்டை/விந்து வங்கிகளுக்கு குறைந்தபட்ச தரநிலைகள் மற்றும் நடத்தை விதிகளை அமைக்க இந்த சட்டம் முயல்கிறது. இதனை மீறுவோருக்கு சிறை தண்டனை அபராதம் ஆகியவை விதிக்கவும் சட்டம் வழிவகை செய்கிறது. இந்நிலையில்  இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020 இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: ஐக்கிய முற்போக்கு கூட்டணி இப்போது இல்லை.. பாஜகவுக்கு எதிராக காங்கிரஸை கழற்றிவிட்டு கூட்டணி அமைக்கும் மம்தா

அப்போது புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த என்.கே.பிரேம் சந்திரன். இந்த மசோதா, வாடகைத்தாய் மசோதாவை (surrogacy bill) சார்ந்து உள்ளது. வாடகைத்தாய் மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த மசோதாவை விவாதத்திற்கு எடுத்துகொள்ளக் கூடாது என்று பேசினார்.

இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், இரண்டு மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து இனப்பெருக்க உதவி தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதா 2020 குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிங்க: வேளாண் போராட்டத்தில் விவசாயிகள் இறந்ததாக பதிவுகள் இல்லை: மத்திய அரசு

First published:

Tags: Central government, Parliament, Parliament Session