ஹோம் /நியூஸ் /இந்தியா /

மத்தியப்பிரதேசம், மிசோரமில் இன்று வாக்குப்பதிவு

மத்தியப்பிரதேசம், மிசோரமில் இன்று வாக்குப்பதிவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

மத்தியப்பிரதேசம், மிசோரம் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும், வரும் 11-ம் தேதி எண்ணப்பட உள்ளன என தேர்தல் ஆணையம் அறிவித்து

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மத்தியப்பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டப்பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சத்தீஸ்கரில் 2 கட்டங்களாக தேர்தல் முடிவடைந்த நிலையில், 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேசம் மற்றும் 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலங்களில் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது.

மிசோரமில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 4 மணியுடன் முடிவடைகிறது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 1,179 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 209 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக-வும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க 40 கம்பெனி துணை ராணுவம் மற்றும் 43 கம்பெனி மிசோரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேச சட்டப்பேரவைக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 227 தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையும், 3 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2, 907 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் 65,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 2,000 வாக்குச்சாவடிகளில் பெண்கள் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100 வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் மட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க 1,80,000 பேர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும், வரும் 11-ம் Electionதேதி எண்ணப்பட உள்ளன.

Also see...

First published:

Tags: 5 State Election, Madhya pradesh, Mizoram