சட்டமன்ற தேர்தல் தேதி இந்த வார இறுதியில் வெளியாக வாய்ப்பு

சட்டமன்ற தேர்தல் தேதி இந்த வார இறுதியில் வெளியாக வாய்ப்பு

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் தனது பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

 • Share this:
  தமிழகம், கேரளா,  உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி, பிப்ரவரி 27 அல்லது 28 ஆம் தேதியில் அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.

  5 மாநில சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல தேர்தல் ஆணையமும் தனது பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

  தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் சென்ற தேர்தல் குழு, தேர்தல் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தியது.

  இந்நிலையில், இந்த வார இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது. அவ்வாறு தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Must Read : குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பரிந்துரை
  Published by:Suresh V
  First published: