கொரோனாவால் சமீபத்தில் பாதிப்புக்குள்ளான அரசியல் பிரபலங்கள்!

கொரோனாவால் சமீபத்தில் பாதிப்புக்குள்ளான அரசியல் பிரபலங்கள்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அரசியல் பிரபலங்கள்

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்

  • Share this:
இந்தியாவில் உருமாறிய கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை இல்லாத வகையில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழப்புகளும் 1200ஐ நெருங்கிவிட்டது.

இந்தியாவில் தற்போது தேர்தல் சீசன் என்பதால் பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம், தமிழகம், கேரளா, புதுவை மற்றும் மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளதால் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், வேட்பாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில் பலர் தங்களை சுய தனிமைபடுத்திக் கொண்டுள்ளனர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்

1. யோகி ஆதித்யநாத் - உத்தரப்பிரதேச முதல்வர்

யோகி ஆதித்யநாத்


கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை மேற்குவங்கத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏப்ரல் 14ம் தேதி தனக்கு கொரோனா பாசிட்டிவ் என கூறினார். அவருக்கு நெருங்கியவர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் யோகி ஆதித்யநாத்தும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார்.

2. பினராயி விஜயன் - கேரள முதல்வர்

பினராயி விஜயன்


கேரளாவில் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி முடிந்தது, அதற்கடுத்த 2 நாட்களில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அறிகுறிகள் இல்லாததால் கண்ணூரில் உள்ள அவரது வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

3.  எடியூரப்பா - கர்நாடக முதல்வர் 

BS Yediyurappa
காவிரி உபரிநீரை பயன்படுத்த தமிழகத்தை அனுமதிக்க மாட்டோம்


கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது இரண்டாவது முறையாக இன்று மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் இன்று எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் எடியூரப்பா ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

4. உம்மன் சாண்டி

. உம்மன் சாண்டி


முன்னாள் கேரள முதல்வரும், கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான உம்மன் சாண்டிக்கும் ஏப்ரல் 8ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.

5. பிப்லாப் தேப் குமார் - திரிபுரா முதல்வர்

பிப்லப் டெப்


திரிபுரா மாநில முதல்வர் பிப்லாப் தேப் குமாருக்கு ஏப்ரல் 7ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிப்லாப் குமாருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அவருடைய மனைவியும், சமூக செயற்பாட்டாளருமான நிதி தேபுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 8 மாதங்களில் அவருக்கு 2வது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

6. கனிமொழி

கனிமொழி


திமுக மகளிர் அணிச் செயலாளரும், எம்பியுமான கனிமொழிக்கு வாக்குப்பதிவுக்கு முன்னதாக ஏப்ரல் 3ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. வாக்குப்பதிவின் போது பிபிஇ உடையணிந்து வாக்குச்சாவடிக்கு வந்து அவர் தனது வாக்கினை செலுத்தினார்.

7. அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்


உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவிற்கு கடந்த ஏப்ரல் 14ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் சமீபத்தில் ஹரித்வாரில் நடைபெறும் கும்பமேளாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

8. ஆதித்ய தாக்கரே

ஆதித்ய தாக்கரே


சிவசேனா கட்சித் தலைவரும் மகாராஷ்டிர மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவிற்கு கடந்த மார்ச் 20ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

9. டி. ராஜா

டி. ராஜா


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜாவிற்கு கடந்த ஏப்ரல் 4ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஏப்ரல் 10ம் தேதி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

10. துரை முருகன் - டி.ஆர்.பாலு

டி.ஆர்.பாலு - துரை முருகன்


திமுக பொதுச் செயலாளர் துரை முருகனுக்கு கடந்த ஏப்ரல் 8ம் தேதி நோய்த்தொற்று உறுதியானது. 83 வயதான துரைமுருகன் காட்பாடி தொகுதியின் திமுக வேட்பாளராக போட்டியிட்டவர். தற்போது அவர் நலமடைந்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதே போல திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவிற்கும் ஏப்ரல் 14ம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

10. ரந்தீப் சிங் சுர்ஜேவா - திக் விஜய சிங்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் திக் விஜய் சிங் ஆகியோருக்கு இன்று (ஏப்ரல் 16) கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

11. ஹர்சிம்ரத் கவுர் பாதல்

பஞ்சாபின் முக்கிய கட்சியாக விளங்கும் சிரோமனி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைசருமான ஹர்சிம்ரத் கவுர் பாதலுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

12 . சி.வி.சண்முகம்

cv shanmugam
சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம்


தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு நேற்று (ஏப்ரல் 15) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட அரசியல் பிரபலங்கள் தவிர்த்து மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா, மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன், டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், குஜராத் கல்வித்துறை அமைச்சர் பூபேந்திர சின்ஹ் சுதசமா ஆகியோருக்கும் சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: