நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல தொகுதிகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கட்சிகளின் முன்னிலை நிலவரமும் வெளியாகி வருகின்றன.
நண்பகல் 2.30 மணி நிலவரப்படி, 60 தொகுகளைக் கொண்ட நாகாலாந்து மாநிலத்தில் ஆளும் NDPP- பாஜக கூட்டணி 37 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதர உறுப்பினர்கள் 16 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். இதன் மூலம் நாகாலாந்தில் மீண்டும் முதலமைச்சர் நைபியு ரியோ தலைமையில் மீண்டும் NDPP- பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
அதேபோல்,60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் ஆளும் பாஜக கூட்டணி 35 இடங்களில் முன்னிலை பெற்று பெரும்பான்மை எண்ணிக்கை தாண்டியுள்ளது. இடதுசாரி- காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், புதிய கட்சியான திப்ரா மோதா கட்சி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம் திரிபுராவிலும் பாஜக தனது ஆட்சியை தக்க வைக்கிறது.
மேகாலயா மாநிலத்தில் முதலமைச்சர் கார்னட் சங்மாவின் NPP கட்சி 28 இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 4 இடங்களிலும், பாஜக 4, காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஆச்சரியம் அளிக்கும் விதமாக இதர வேட்பாளர்கள் 18 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். பெரும்பான்மைக்கு 31 இடம் தேவை என்ற நிலையில், கார்னட் சங்மா கட்சிக்கு பாஜக ஆதரவு தரும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த முறை இவர்கள் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.