Home /News /national /

தேர்தலுக்குத் தேர்தல் தோல்வி.. காங்கிரஸ் கட்சி கரைந்தது ஏன்?

தேர்தலுக்குத் தேர்தல் தோல்வி.. காங்கிரஸ் கட்சி கரைந்தது ஏன்?

பெரும் நம்பிக்கை வைத்திருந்த கோவாவிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியையே தழுவியுள்ளது. 

பெரும் நம்பிக்கை வைத்திருந்த கோவாவிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியையே தழுவியுள்ளது. 

பெரும் நம்பிக்கை வைத்திருந்த கோவாவிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியையே தழுவியுள்ளது. 

    5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது ஏன் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    தேர்தலுக்கு தேர்தல் தோல்விகளையே சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, தன் கை வசம் இருந்த பெரிய மாநிலமான பஞ்சாபையும் இழந்துள்ளது. தேர்தலை சந்தித்த மற்ற மாநிலங்களான உத்தராகண்ட், கோவா மற்றும் மணிப்பூரில் பாஜகவிற்கு கடுமையான போட்டியை கூட ஏற்படுத்த முடியவில்லை.

    403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்திலோ இரண்டு தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.  2017 தேர்தலில் 7 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் 6 புள்ளி 25 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது.  தற்போது வாக்கு சதவிகிதமும் 2 புள்ளி 39 விழுக்காடாக வீழ்ந்துள்ளது.  உத்தர பிரதேச பொறுப்பாளர் பிரியங்கா காந்தி மாநிலம் முழுவதும் 209 பேரணிகளை நடத்தினார்.  அதுமட்டுமல்லாமல் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். இவை எதற்கும் உ.பி. மக்கள் அசைந்து கொடுக்கவில்லை.


    பஞ்சாபிலோ பாதிக்கும் மேலான வாக்கு சதவிகிதத்தை காங்கிரஸ் இழந்துள்ளது.  முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியட்ட இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளார். மாநில தலைவரான சித்துவோ அமிர்தசரசில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க - பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி!

    தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு முதலமைச்சரை மாற்றியது, கட்சியின் மூத்த தலைவர்கள் பிரிந்தது. உட்கட்சி பூசல் என பஞ்சாபில் சுய அழிவு பாதைக்கு சென்றது காங்கிரஸ்.  காந்தி குடும்பம் வெற்றியை ஈட்டி தரும் என்ற நம்பிக்கை தொண்டர்களிடம் இல்லை,  தொண்டர்களை இணைக்கும் பெரிய சக்தியாகவும் அவர்கள் இல்லை.

    உத்தராகண்டில், முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஹரிஷ் ராவத் தோல்வியை தழுவியுள்ளார்.  அவரின் விருப்பத்திற்கு மாறாக கடைசி நேரத்தில் தொகுதியை மாற்றியது,  பஞ்சாப் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது என ராவத்தின் விவகாரத்தில் அனைத்துமே சொதப்பலாக முடிந்தது.

    பெரும் நம்பிக்கை வைத்திருந்த கோவாவிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியையே தழுவியுள்ளது.  2017- ஆம் ஆண்டு தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த போதும் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.  இதனால், தேர்தல் முடிவுக்கு முன்னதாக வேட்பாளர்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

    தற்போது ரிசார்ட் பாலிடிக்சுக்கு தேவையே இல்லாமல் பாஜக வெற்றி பெற்றுள்ளது.  மத்தியில் பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சி கோவா மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளதாக பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

    ஒரு காலத்தில் இந்தியா முழுவதையும் ஆண்ட ஒரு கட்சி தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர் என இரு மாநிலங்களில் சுருங்கி விட்டது. மகாராஷ்டிராவிலும் கூட்டணியில் 3-வது இடமே வகிக்கிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Congress, Election 2022

    அடுத்த செய்தி