கேரளாவில் நடந்த 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வரும் நிலையில் தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார்.
பாஜக சார்பில் நீமம் தொகுதியில் போட்டியிட்ட கும்மணம் ராஜசேகர் 887வாக்குகளுடன் முன்னிலையுடன் உள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 4 தொகுதிகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. இதன் மூலம் இந்தத் தேர்தலில் சபரிமலை விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியபோதிலும் அது எடுபடவில்லை எனத் தெரிகிறது.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத்த தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மாதம் 6ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிவித்தன.
தற்போதைய நிலவரங்களின் படி கேரளாவின் 140 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் இடது ஜனநாயக முன்னணி 90 இடங்களிலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி 47 இடங்களிலும் பாஜக தலைமை என்.டி.ஏ 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
திருவனந்தபுரத்தின் 14 தொகுதிகளில் இடதுசாரிகள் 12 இடங்களிலும் திருச்சூரில் 13 இடங்களிலும் இடதுசாரி கட்சி முன்னிலையில் உள்ளன. புதுப்பள்ளியில் முன்னள் முதல்வர் உம்மன் சாண்டி 4,000 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.
பெட்ரோல் விலையை ரூ.60 ஆகக் குறைப்போம் என்ற கும்மணம் ராஜசேகரன் 1763 வாக்குகள் வித்தியாசத்தில் நீமம் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 138 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 94 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், ஒரு தொகுதியில் முன்னிலை வகிப்பதாகத் தெரிகிறது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.