உட்கட்சி பூசலால் திணரும் காங்கிரஸ்: வயநாட்டில் 4 தலைவர்கள் ராஜினாமாவையடுத்து கேரள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜினாமா!

உட்கட்சி பூசலால் திணரும் காங்கிரஸ்: வயநாட்டில் 4 தலைவர்கள் ராஜினாமாவையடுத்து கேரள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராஜினாமா!

காங்கிரஸ்

சில நாட்கள் முன்னதாக ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான வயநாட்டைச் சேர்ந்த 4 முக்கிய தலைவர்கள் உட்கட்சி பூசலால் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் விஜயன் தாமஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருவது அக்கட்சி தலைமையை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவிலேயே காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்ற மாநிலங்களுள் ஒன்றாக கேரளா விளங்குகின்றது. ஆளும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கூட்டணியை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி அங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் விஜயன் தாமஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நேமம் தொகுதியில் போட்டியிடுவதில் தீவிரமாக இருந்து வரும் விஜயன் தாமஸின் விருப்பத்திற்கு காங்கிரஸ் தலைமை செவி சாய்க்காமல் இருந்து வந்தது, இதன் காரணமாக அதிருப்தியடைந்த விஜயன் தாமஸ் மாநில பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கட்சியின் செயல்பாடுகள் மற்றும் குழுவாதம் ஆகியவற்றால் ஏற்பட்ட மனக்கசப்பினால் பொதுச் செயலர் பதவியை தான் ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார் விஜயன் தாமஸ். விரைவில் அவர் பாஜக அல்லது சிபிஎம் போன்ற ஏதேனும் ஒரு கட்சியில் இணைவார் என தகவல்கள் வெளியாகின.

இருப்பினும் பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் அவர் பத்ரிகையாளர் சந்திப்பில் தன்னுடைய நிலைப்பாடு தொடர்பாக பேசுவதாக இருந்த நிலையில் மூத்த தலைவர்கள் சிலரின் தலையீட்டால் அவர் அமைதிப்படுத்தப்பட்டார், மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் முடிவையும் கைவிட்டார்.

இதனிடையே தான் காங்கிரஸில் இருந்து விலகப்போவதில்லை எனவும் கட்சியுடனான எனது பிரச்னையை பேசி சரி செய்வேன் எனவும், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பாடுபடுவேன் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜக மற்றும் சிபிஎம் என இரண்டுமே காங்கிரஸின் பிரதான எதிரிகள். நான் உட்கட்சி பூசல் காரணமாகவே ராஜினாமா செய்துள்ளேன், ஆனால் நான் பாஜகவில் இணையப்போவதாக சிபிஎம் கட்சியின் ஐடி பிரிவினர் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சில நாட்கள் முன்னதாக ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான வயநாட்டைச் சேர்ந்த 4 முக்கிய தலைவர்கள் உட்கட்சி பூசலால் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Arun
First published: