ஹோம் /நியூஸ் /இந்தியா /

அட்ரஸ் கேட்பது போல் வந்து, மார்பை தொட்ட இளைஞருக்கு, இளம் பெண் கொடுத்த ஷாக்!

அட்ரஸ் கேட்பது போல் வந்து, மார்பை தொட்ட இளைஞருக்கு, இளம் பெண் கொடுத்த ஷாக்!

பாவனா காஷ்யப்

பாவனா காஷ்யப்

திடீரென மார்பகங்களை தொட்டு அறுவறுப்பான முறையில் நடந்து கொண்ட அந்த நபரை தப்பிச்செல்லாமல் தடுத்து அவரின் ஸ்கூட்டியை சாக்கடையில் தள்ளிவிட்டிருக்கிறார் இளம்பெண் பாவனா காஷ்யப்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில் இளம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும், பஸ், ரயில்களில் பயணிக்கும் போதும், சாலைகளில் நடந்து செல்லும் போதும் பெண்களிடம் பாலியல் ரீதியில் சில்மிஷ செயல்களில் ஆண்கள் ஈடுபடுவதும் அன்றாடம் நடக்கக்கூடிய செயல்களாக மாறிவிட்டது. இது போன்ற சம்பவங்களின் போது எல்லா நேரங்ககளிலும் பெண்களுக்கு உதவி கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. அந்த நேரங்களில் அவர்களே இது போன்ற நபர்களுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. பலரும் இயலாமையில் அமைதியாக கடந்து சென்றுவிடுகின்றனர். ஒரு சில பெண்களே அது போன்று அத்துமீறும் நபர்களுக்கு பாடம் புகட்டுகிறார்கள்.

அசாமில் இளம் பெண் ஒருவர் தனது மார்பகங்களை சீண்டி அறுவறுப்பாக நடந்து கொண்ட நபரிடம் போராடி அவருக்கு தக்க பாடம் புகட்டியதுடன் தனக்கு நேர்ந்த அந்த துயர சம்பவத்தை ஆதாரத்துடன் விளக்கி ஃபேஸ்புக்கில் வீடியோவுடன் பதிவிட்டு பிறருக்கு தன்னம்பிக்கை வரவழைத்துள்ளார்.

Also Read:   டேக்ஸி ஓட்டுநர் மீது இளம்பெண் தாக்குதல்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

அசாமின் கவுகாத்தியைச் சேர்ந்தவர் பாவனா காஷ்யப், இவர் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 30) மாலை 4.30 மணியளவில் ஒதுக்குப்புறமான சாலை ஒன்றில் நடந்து சென்றுகொண்டிருந்த போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் வாகனத்தில் இருந்தவாரே அவரிடம் வழிகேட்டிருக்கிறார்.

அந்த இளைஞர் கேட்ட விலாசம் தனக்கு தெரியாது எனவும் வேறு யாரிடமாவது கேட்டுக்கொள்ளுங்கள் என அவர் கூறியிருக்கிறார். அந்த சமயம் திடீரென பாவனா காஷ்யப்பின் மார்பகங்களை தொட்டு மிகவும் அறுவறுப்பான முறையில் நடந்து கொண்டிருக்கிறார் அந்த நபர்.

ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே புரியாமல் திகைத்த பாவனா காஷ்யப் அந்த நபரின் செயலால் அதிர்ந்து போனார். அந்த நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்த நபர் புறப்பட தயாரான போது, சுதாரித்துக்கொண்ட பாவனா, தனது முழு பலத்தையும் பயன்படுத்தி அந்த நபரின் ஸ்கூட்டரின் பின் டயரை அப்படியே தூக்கியிருக்கிறார், இதனால் அந்த நபரால் மேற்கொண்டு வாகனத்தில் செல்ல முடியவில்லை.

பாவனா காஷ்யப்

இப்படியே சுமார் 30 நொடிகள் போராடிய பாவனா ஒருவழியாக இருசக்கர வாகனத்துடன் அந்த நபரை அருகே இருந்த சாக்கடை கால்வாயில் தள்ளிவிட்டுள்ளார். தனது ஸ்கூட்டி சாக்கடைக்குள் விழுந்துவிட்டதால் அந்த நபரால் உடனடியாக அங்கிருந்து தப்ப முடியாமல் போனது. வேறு வழியில்லாமல் அவர் அங்கே சிக்கிக்கொண்டார்.

Also Read:   ஊரே வியந்து பேசும் பி.வி.சிந்துவின் பயிற்சியாளர் யார்?.. Park Tae-Sang பற்றிய சுவாரஸ்ய தகவல்!

இதன் பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் பாவனாவுக்கு துணையாக இருக்க, நடந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுக்கத்தொடங்கினார்.

அந்த நபரின் பெயர் மதுசனா ராஜ்குமார் என்பதும் அவர் கவுகாத்தியின் பஞ்சபாரி பகுதியைச் சேர்ந்தவர் எனவும், தெரியாமல் செய்துவிட்டேன் விட்டுவிடுமாறும் மன்னிப்பு கோரியுள்ளார். இருப்பினும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து மதுசனா ராஜ்குமாரை அவர்களிடம் ஒப்படைத்தார் பாவனா.

தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை விளக்கி பெண்கள் துனிவுடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி, அத்துமீறி நடந்து கொண்ட நபரை வளைத்துப்பிடித்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார் பாவனா. மேலும், பாவனாவிடம் அத்துமீறிய நபர் மீது தற்போது டிஸ்புர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தினமும் ஒரு 'நிர்பயா' பிறக்கக் கூடாது, அப்படி பிறந்தால் அத்தகைய மனநோய் மனப்பான்மை கொண்ட ஒரு மனிதன் பிறக்கிறான் என அவர் தெரிவித்துள்ளது பெண்களுக்கு பாடமாக மாறியிருக்கிறது.

Published by:Arun
First published:

Tags: Assam, Crime News, Sexual harassment