ஹோம் /நியூஸ் /இந்தியா /

மூதாட்டியின் நிலப்பிரச்சனையை தீர்க்க உடனே நடவடிக்கை எடுத்த அசாம் முதல்வர்... குவியும் பாராட்டுக்கள்!

மூதாட்டியின் நிலப்பிரச்சனையை தீர்க்க உடனே நடவடிக்கை எடுத்த அசாம் முதல்வர்... குவியும் பாராட்டுக்கள்!

அசாம் முதல்வர்

அசாம் முதல்வர்

அஸ்ஸாம் அரசாங்கத்தின் முதன்மையான ஒருனோடோய் திட்டத்தின் கீழ் அவருக்கு மாதம் 250 ரூபாய் அளிக்கப்படும் என்றார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Assam |

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது ட்விட்டர் பக்கத்தில் நிலத் தகராறில் சிக்கிய வயதான பெண்ணுக்கு உதவும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இப்போது நெட்டிசன்களிடையே பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

“சேவை செய்ய கிடைத்த வாய்ப்பு கடவுள் கொடுத்த அருள்! என்ற தலைப்பிட்டு பகிர்ந்த தனது ட்வீட்டில், மரியாதைக்குரிய மூதாட்டி எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க கோக்ரஜாரின் டிசி மற்றும் எஸ்பிக்கு அறிவுறுத்தப்பட்டது, ”என்று சர்மா பதிவிட்டுள்ளார்.

மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடத்தில் ஒரு வயதான மூதாட்டி தனது நிலப் பிரச்னைக்குத் தீர்வு காண முதலமைச்சரை வேண்டினார். அவரது கோரிக்கையை கேட்ட அசாம் முதல்வர் உடனடியாக அந்த பிரச்சனை சார் செய்யப்பட்டு, அவருக்குச் சொந்தமாக வீடு கட்ட ஏற்பாடு செய்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் ஓய்வூதியமாக ஒவ்வொரு மாதமும் ₹ 250 கொடுக்குமாறு அந்த பெண் வேண்டுகோள் விடுத்தார். அதற்கும் செவி சாய்த்த முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அஸ்ஸாம் அரசாங்கத்தின் முதன்மையான ஒருனோடோய் திட்டத்தின் கீழ் அவருக்கு அந்த பணம் அளிக்கப்படும் என்றார். அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் மாதம் ₹ 1,250 ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

மாநில நிதித் துறையின் இணையதளத்தின்படி, ஒருனோடோய் திட்டம் 2020 இல் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் இரண்டு நோக்கங்கள்: பெண்களின் பொருளாதார நிலையை வலுவூட்டல் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கேற்ப, வறுமைக் கோட்டிற்கு (BPL) கீழ் உள்ள ஏழைகளை வெளியே எடுப்பது ஆகும்.

இதையும் படிங்க: 'அது ஒரு கொலை'.. முதலமைச்சர் வாட்ஸ் அப்க்கு வந்த முக்கிய தகவல்.. வெளிச்சத்துக்கு வந்த சிறுமியின் மரணம்!

இந்தத் திட்டத்தில் இதுவரை 19.32 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு மாதம் 250 ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்த வீடியோ இணையத்தில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது. மக்களின் குறைகளை தீர்ப்பதில் சிறந்த பணி செய்து வருவதாகவும் பாராட்டுகின்றனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Assam