அசாம், மேற்குவங்கத்தில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு - மம்தா பானர்ஜியின் நந்திகிராம் தொகுதியில் 144

அசாம், மேற்குவங்கத்தில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு - மம்தா பானர்ஜியின் நந்திகிராம் தொகுதியில் 144

மம்தா பானர்ஜி

மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

  • Share this:
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அதில், தமிழம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதேநேரத்தில் அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே அசாமிலும், மேற்கு வங்கத்திலும் முதல் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.

முதற்கட்டமாக, கடந்த 27ம் தேதி அசாமில் 47 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, நாளை, அசாமில் 39 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. நேற்றுடன் இதற்கான பிரசாரம் ஓய்வடைந்தது. இதையொட்டி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று, தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் இரண்டாவது நாளாக பிரம்மாண்ட பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்தார்.

அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், பாஜகவினர் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள தொகுதிகளில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடங்கும். தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள அந்த தொகுதியில் உட்சபட்ச பதற்றமும் நிலவுகிறது. எனவே, அந்த தொகுதியில் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: