அசாம், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு

மம்தா பானர்ஜி

அசாம், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைந்தது.

 • Share this:
  தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அதில், தமிழம், புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அதேநேரத்தில் அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஏற்கெனவே அசாமிலும், மேற்கு வங்கத்திலும் முதல் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில், ஏப்ரல் 1-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

  அதில், அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மேற்குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இரண்டு மாநிலங்களிலும் வாக்குப் பதிவை அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

  அதில், மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடங்கும். தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள நந்திகிராம் தொகுதி நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னதாக, பாதுகாப்பு படை அதிகாரிகளின் உதவியுடன் பா.ஜ.க பணப்பட்டுவாடா செய்வதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: