அசாம், மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது.. பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு...

வாக்காளர்கள்

அசாம், மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 • Share this:
  126 இடங்களைக் கொண்ட அசாம் மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாகவும், 294 இடங்களைக் கொண்ட மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது.

  அசாம் மாநிலத்தில் முதல் கட்டமாக சோனிட்பூர், பிஸ்வந்த், ஜோர்ஹட் என 12 மாவட்டங்களுக்குட்பட்ட 47 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அங்கு 264 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறிப்பாக முதலமைச்சர் சர்பானந்த சோனாவால், அதுல் போரா, அகில் கோகாய், ரிபுன் போரா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 11, 537 வாக்குச்சாவடிகளில் 81,9,000க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர்.

  பதற்றமான மற்றும் அதிக வாக்காளர்கள் உள்ள 50 விழுக்காடு வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் வாக்காளர்கள் பாதுகாப்புடன் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில தேர்தல் அதிகாரி ராகுல் சந்திர தாஸ் தெரிவித்திருக்கிறார்.

  மேலும் படிக்க... பாஜக பூச்சாண்டி... நான் இந்தியாவிற்கே தமிழ்நாடு என்று பெயர் வைப்பேன் - சீமான் கொந்தளிப்பு

  இதேபோன்று மேற்குவங்க மாநிலத்தில் முதல் கட்டமாக பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் புருலியா, ஜார்கிராம், பாங்குரா, கிழக்கு மிதினிபூர், மேற்கு மிதினிபூர் ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட 30 தொகுதிகளில் சனிக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் திரணமுல் காங்கிரஸ் கட்சிக்கும், மாநிலத்தில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக-வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

  திரிணமுல் காங்கிரஸ், பாஜக கட்சிகளில் தலா 29 வேட்பாளர்கள் என மொத்தம் 191 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புருலியா தொகுதி பாஜக வேட்பாளர் சுதிப் முகர்ஜி, திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் சுஷாந்தா மகடோ உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வாக்குப்பதிவை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக அதிகளவில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாநில எல்லைகளில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: