உலகம் முழுவதும் நேற்று சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இந்த தினத்தை சிறப்பிக்கும் விதமாக அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமத்தினர் ஒரு லட்சம் மரங்களை நட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தின் கோலாகாட் மாவட்டத்தின் தன்சிரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்த உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டனர். அப்பகுதியை பசுமையானதாகவும் தூய்மையானதாகவும் மாற்ற இந்த முன்னெடுப்பை மேற்கொண்டதாக அவர்கள் கூறினர்.
இந்த திட்ட விழாவில் அப்பகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிஸ்வஜித் புகான் பங்கேற்றார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு முழுவதும் மரங்களை நட திட்டமிட்டுள்ளோம். நம்போர் காடுகளை இங்கு உருவாக்க உள்ளோம். இந்த திட்டத்திற்காக நிலத்தை கொடுக்க முன்வந்த மக்களுக்கு அதை சரிக்கட்டும் விதத்தில் முறையான உதவிகள் செய்து தரப்படும்.
Under this drive, various depts. in Kaliabor sub-division, panchayat, organisations, institutions and people volunteered to plant 1 lakh saplings in s record breaking time of 15 minutes at various households and public establishments in Kaliabor. pic.twitter.com/GPWH40Gn0C
இந்த பகுதி முன்னர் காடாகத் தான் இருந்தது. மக்கள் இங்கு குடியேறி கிராமமாக மாற்றியுள்ளனர். ஒரு காலத்தில் இவர்கள் காட்டை அழித்து கிராமத்தை உருவாக்கிய நிலையில், அதை மீண்டும் காடாக உருவாக்க இவர்கள் முயற்சி செய்கின்றனர் என்றார்.
இந்த மரம் நடும் விழாவில் துணை ராணுவப் படை வீரர்கள், காவல்துறையினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஐந்தாண்டுகளில் இங்கு 15 லட்சம் மரக் கன்றுகளை நட இவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 10 மரங்களாவது ஆண்டு தோறும் நட உறுதி எடுத்துள்ளனர். இந்த பகுதி புவி வெப்பமயமாதல், கால நிலை மாற்றம் போன்ற சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இங்கு பருவ மழை குறைவாகக் காணப்படுகிறது. எனவே, இந்த மாபெரும் மரம் நடும் முயற்சியை இந்த கிராமத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் அசாமின் கிலேபோர் என்ற பகுதியில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேசப் மஹந்தா இந்த திட்டதை முன்னிற்று நடத்தினார்.
Published by:Kannan V
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.