நாட்டின் 75வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், அசாம் மாநிலத்தில் 1 லட்சம் சிறிய வழக்குகளை ரத்து செய்வதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார்.
சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பான குற்றச்சாட்டில் நிலுவையில் உள்ளிட்ட பல வழக்குகள் உட்பட ஒரு லட்சம் "சிறிய வழக்குகளை" ரத்து செய்வதாக குவாஹாட்டியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களிடம் உரையாற்றிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார். அசாமில் இதுவரை மொத்தம் 4,00,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
முக்கிய வழக்குகளை விட சிறு வழக்குகள் அதிகம் சேர்ந்து நீதித்துறையின் சுமையை அதிகரித்துள்ளது. அதில் சமூக வலைதளக் கருத்துக்கள் குறித்த வழக்குகள் தான் அதிகம். இந்த சுமையைக் குறைக்கும் வகையில் தான் இந்த நடவடிக்கையை எடுக்க உள்ளதாக முதல்வர் சர்மா கூறினார்.
’ஆகஸ்ட் 14, 2022 நள்ளிரவுக்கு முன் பதிவு செய்யப்பட்ட ஒரு லட்சம் சிறு வழக்குகள் திரும்பப் பெறுவது என அரசாங்கம் முடிவு செய்துள்ளது. வழக்கறிஞர்கள் கிடைக்காமல் நிரபராதிகள் யாராவது சிறையில் வாடினால், அத்தகைய நபர்களை உடனடியாக விடுதலை செய்வது உறுதி செய்யப்படும்’ என்றும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
சுதந்திர தினத்தையொட்டி கௌஹாத்தி தலைமையகத்தில் கோடி ஏற்றி பேசிய சர்மா, "ஒரு லட்சம் சிறு வழக்குகள் குறைக்கப்படுவது, பலாத்காரம் மற்றும் கொலை போன்ற கடுமையான குற்றங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த நீதித்துறைக்கு உதவும்" என்று கூறினார்.
காத்திருப்பு முடிந்துவிட்டது... விரைவில் 5ஜி சேவை- பிரதமர் நரேந்திர மோடி
சுதந்திர தினத்தன்று, நாட்டின் நலனுக்காக உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு, ‘கடந்த தலைமுறையினர் செய்த தியாகங்களைப் பற்றி இந்தத் தலைமுறையினருக்குத் தெரியப்படுத்த, கல்விச் சுற்றுலாவின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள செல்லுலார் சிறைக்குச் செல்ல 1,000 இளைஞர்களை மாநில அரசு அனுப்பும்’ என்றும் அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assam, Cases, Court Case, Independence day