• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உலக காண்டாமிருக தினமான இன்று 2,479 காண்டாமிருக கொம்புகளை எரிக்கும் அசாம் - காரணம் என்ன?

உலக காண்டாமிருக தினமான இன்று 2,479 காண்டாமிருக கொம்புகளை எரிக்கும் அசாம் - காரணம் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

காண்டாமிருகங்களின் கொம்புகள் அறிவியல் ரீதியாக பயனுள்ளதாக இல்லை என்ற போதும் மேற்கண்டபடி அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றிய கட்டுக்கதைகள் பல நாடுகளில் பரவலாக உள்ளன.

  • Share this:
இன்று உலக காண்டாமிருகம் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த அற்புதமான விலங்கினத்தை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், அழிவின் விளிம்பில் இருக்கும் காண்டாமிருக இனத்தை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டும் "உலக காண்டாமிருக தினம்" செப்டம்பர் 22-ம் தேதியான இந்து அனுசரிக்கப்படுகிறது. உலகத்தில் மொத்தம் 5 வகையான காண்டாமிருகங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான அறிக்கையின்படி, நம் நாட்டில் சுமார் 3,000 காண்டாமிருகங்கள் இருப்பதாகவும், இதில் 2,000-கும் மேற்பட்டவை அசாம் மாநில காடுகளில் இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இதனிடையே அருகி வரும் காண்டாமிருகங்களை காப்பாற்ற உலக காண்டாமிருக தினமான இன்று சிறப்பு நிகழ்வு ஒன்றை அசாம் அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதில் அரசின் வசம் உள்ள சுமார் 2,479 காண்டாமிருக கொம்புகளை பொதுவெளியில் வைத்து பகிரங்கமாக எரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பொது விழா Bokakhat பகுதியில் அமைந்துள்ள காஜிரங்கா தேசிய பூங்காவில் (Kaziranga National Park) அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முதன்மை விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விழாவின் நோக்கம்:

ஏற்கனவே காண்டாமிருக இனம் படிப்படியாக அழிந்து வரும் நிலையில் இந்த விலங்கின் கொம்புகளுக்காக வேட்டைக்காரர்கள் மற்றும் கடத்தல்காரர்கள், காண்டாமிருகங்களை சட்டவிரோதமாக வேட்டையாடி வருகின்றனர். சட்டவிரோத சந்தையில் இத்தகைய விலங்குகளின் கொம்புகளுக்கு அதிக விலை கிடைக்கும். இந்நிலையில் உலக காண்டாமிருக தினமான இன்று, விலங்குகளின் கொம்பு போன்ற பொருட்களுக்கு மதிப்பு இல்லை என்பதை தெளிவான செய்தியாக உரக்க தெரிவிக்கும் வகையில், இதுவரை கைப்பற்றப்பட்ட காண்டாமிருக கொம்புகளை மக்கள் முன்னிலையில், தீ வைத்து எரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அசாம் வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "காண்டாமிருகங்களின் கொம்புகள் பாரம்பரிய சீன மருத்துவத்தில் புற்றுநோய் முதல் பல பிரச்சனைகளை குணப்படுத்த மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. அதே போல வியட்நாமில், காண்டாமிருகக் கொம்பை வைத்திருப்பது ஒரு கெளரவா சின்னமாக கருதப்படுகிறது. இது போல பல நாடுகளின் காண்டாமிருக கொம்பு தேவைக்காக, இங்கிருக்கும் காண்டாமிருகங்களை வேட்டையாடுவது தவறான ஒன்று" என்று கூறப்பட்டு உள்ளது.

Also read... கால்பந்து விளையாடிய கரடிகள்... ஒடிசாவில் நிகழ்ந்த வைரல் சம்பவம்!

மேலும் காண்டாமிருகங்களின் கொம்புகள் அறிவியல் ரீதியாக பயனுள்ளதாக இல்லை என்ற போதும் மேற்கண்டபடி அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றிய கட்டுக்கதைகள் பல நாடுகளில் பரவலாக உள்ளன. எனவே காண்டாமிருக கொம்புகளின் மருத்துவ பயன்களை பற்றி பரவி உள்ள கட்டுக்கதைகளை உடைப்பதற்கும், வேட்டையாடுவதை தடுப்பதற்கும் சுமார் 2,479 காண்டாமிருக கொம்புகளை பொதுவெளியில் வைத்து மாநில முதல்வர், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் முன்னிலையில் எரிக்க முடிவு செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக அசாம் மாநில கருவூலங்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த காண்டாமிருக கொம்புகளை பரிசோதித்த உயர்மட்டக்குழு சுமார் 2,623 கொம்புகளில் 94 கொம்பு துண்டுகள் கல்விக் காரணங்களுக்காக மரபுத் துண்டுகளாக பாதுகாக்க முடிவு செய்தது. தவிர 50 கொம்புகளை நீதிமன்ற வழக்குகளுக்காக பாதுகாக்க முடிவு செய்தது. தற்போது மீதமுள்ள 2,479 கொம்பு துண்டுகளை எரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: