அசாமில் ஆயுத படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் விரைவில் முழுமையாக நீக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். அசாம் மாநிலத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அமித் ஷா, அம்மாநில காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் சிறப்பு கௌரவம் வழங்கும் விழாவில் பங்கேற்று பேசினார். காவல்துறை அல்லது ராணுவத்திற்கு வழங்கப்படும் குடியரசு தலைவரின் மிக உயரிய கௌரவம் இதுவாகும். இந்த கௌரவத்தை பெறும் 10 ஆவது மாநிலம் அசாம்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, ‘அசாமில் இந்த ஆயுத படை சட்டம் 1990ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இதுவரை ஏழு முறை இந்த சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தபின், அசாமின் 23 மாவட்டங்களில் இந்த சட்டம் நீக்கப்பட்டுள்ளது. விரைவில் மாநிலம் முழுவதிலிருந்து இந்த சட்டம் நீக்கப்படும் என நம்புகிறேன்.
ஒரு காலத்தில் அசாமில் ஆயுத படை சட்டம் இருந்துது. ஆனால் தற்போது இளைஞர்களுக்கு வளர்ச்சி, சிறந்த எதிர்காலம் என்ற பாதையில் அசாம் பயணிக்கிறது. பயங்கரவாதம் இல்லாத அசாம் விரைவில் உருவாகும். கடந்த ஆறு மாதங்களாக அசாமில் ஊடுருவல் ஏதும் இல்லை. கடந்த ஓராண்டில் அசாம் காவலர்கள் பல மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளனர். மேலும் பல கிளர்ச்சிக்குழுக்களுடன் சமாதானம் பேசப்பட்டு, அமைதி எட்டப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க: தாஜ்மஹால் சிவாலயமாக இருந்தது: 20 அறைகளை திறக்க உயர் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் மனு
முன்னதாக கடந்த ஏப்ரல் 28 தேதி அசாம் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடியும் ஆயுத சட்டம் முழுமையாக அசாமில் இருந்து நீக்கப்படும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். அதேபோல், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் சூழலுக்கு ஏற்ப விரைவில் இந்த சட்டம் நீக்கப்படும் என அசாம் மக்களுக்கு உறுதி அளித்திருந்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Assam, Home Minister Amit shah