ஹோம் /நியூஸ் /இந்தியா /

டெங்கு பரவல்.. பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் லீவ்.. அதிரடி நடவடிக்கையில் அசாம் அரசு!

டெங்கு பரவல்.. பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம் லீவ்.. அதிரடி நடவடிக்கையில் அசாம் அரசு!

டெங்கு

டெங்கு

நவம்பர் 1 முதல் 5 வரை மாநிலத்தில் கண்டறியப்பட்ட 285 டெங்கு வழக்குகளில் 271 பேர் கர்பி அங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய சுகாதார இயக்கம் (NHM) அறிக்கை தெரிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Assam |

  மழைக்காலம் வந்தாலே தண்ணீர் தேங்கி அதில் பூச்சிகள் வளர்ந்து நோய்களை பரப்ப தொடங்கி விடும். மழைக் காலத்தில் கொசுக்களின் இனப்பெருக்கம் என்பது சொல்லவே தேவை இல்லை. சரமாரியாக அதிகரித்து நோய்களை பறப்பது தொடங்கிவிடும். அப்படி தற்போது டெங்கு பரவல் அசாம் மாநிலத்தில் அதிகரித்துள்ளது.

  டெங்கு பாதிப்பு காரணமாக அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் உள்ள திபுவில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் அடுத்த வாரம் முழுவதும் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  கடந்த ஐந்து நாட்களில், கர்பி அங்லாங் மாவட்டத்தில் மட்டும் சுமார் 270 டெங்கு நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். டெங்கு தொற்றுக்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக திப்பு முனிசிபல் போர்டு மற்றும் கிரேட்டர் டிபு டவுன் பகுதிகளில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மூடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

  நவம்பர் 1 முதல் 5 வரை மாநிலத்தில் கண்டறியப்பட்ட 285 டெங்கு வழக்குகளில் 271 பேர் கர்பி அங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய சுகாதார இயக்கம் (NHM) அறிக்கை தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க: 10% இடஒதுக்கீடு: அறிய வேண்டிய 10 முக்கியத் தகவல்கள்!

  கம்ரூப் பெருநகரில் எட்டு நோயாளிகளும், நல்பரி பகுதியில் இருவரும் சரைடியோ, கம்ரூப் (கிராமப்புறம்), நாகோன் மற்றும் ஹோஜாய் மாவட்டங்களில் தலா ஒரு நோய் அறிகுறியும் கண்டறியப்பட்டுள்ளது.

  NHM-Assam Mission இயக்குநர் எம்.எஸ்.லட்சுமி பிரியா ஞாயிற்றுக்கிழமை கர்பி ஆங்லாங்கில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்து, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மாவட்டக் குழுவுக்குத் தேவையான ஆதரவை வழங்கினார்.

  "கர்பி ஆங்லாங்கில் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது, மேலும் நிலைமையை எதிர்த்துப் போராட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன" என்று NHM அறிக்கை கூறியது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Assam, Dengue, School Leave