ஹோம் /நியூஸ் /இந்தியா /

எல்லாரும் ஒழுங்கா இருக்கணும்.. பட்டாக் கத்தியுடன் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்!

எல்லாரும் ஒழுங்கா இருக்கணும்.. பட்டாக் கத்தியுடன் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்!

பட்டா கத்தியுடன் வந்த பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்

பட்டா கத்தியுடன் வந்த பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர்

அசாம் மாநிலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு பட்டாக்கத்தியைத் தூக்கி வந்து சர்ச்சையை ஏற்படுத்தி சஸ்பெண்ட் ஆகியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Assam, India

  அசாம் மாநிலம் தாராப்பூர் பகுதியைச் சேர்ந்த 38 வயதான திரிதிமேதா தாஸ் கச்சார் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சுமார் 11 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு பணிபுரியும் திரிதிமேதா தாஸ், சமீபத்தில் பள்ளிக்கு பட்டாக்கத்தியை தூக்கி வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பள்ளி வளாகத்தில் கையில் பட்டா கத்தியுடன் அவர் வளம் வரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இவரின் இந்த அச்சுறுத்தும் செயல் குறித்து சனிக்கிழமை காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.

  தொடர்ந்து காவல்துறை பள்ளிக்கு வந்த போது ஆயுதத்தை மறைத்து இயல்பாக இருந்துள்ளார் தலைமை ஆசிரியர் திரிதிமேதா. பின்னர் சோதனையிட்ட போது அவரிடம் இருந்து பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி, துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரி பர்வீஸ் நீஹால் ஹாசரி கூறுகையில், "பள்ளியில் உள்ள ஒழுங்கீனம் காரணமாக தலைமை ஆசிரியர் திரிதிமேதா ஆத்திரம் அடைந்துள்ளார்.

  பள்ளிக்கு 7 ஆசிரியர்கள் மட்டும் போதும் என்ற நிலையில், 13 ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் பலரும் ஒழுங்கிணமாக இருப்பதாக தலைமை ஆசிரியருக்கு கோபம். எனவே, சக ஆசிரியர்கள்,மாணவர்களுக்கு பயம் வந்து ஒழுங்குக்கு வர வேண்டும் என்பதற்காகவே பள்ளிக்கு பட்டா கத்தியை தூக்கிக் கொண்டு வந்தார். " இவ்வாறு தெரிவித்தார்.

  இதையும் படிங்க: கொய்யாவுக்காக நடந்த கொலை.. பழம் பறித்த தலித் இளைஞரை அடித்தே கொன்ற கும்பல்!

  அந்த ஆசிரியர் மீது மற்ற ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்காத நிலையில், அவரை பள்ளிக் கல்வித்துறை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Assam, School Teacher, Viral Video