• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சமூகவலைத்தளங்களில் பரவும் வதந்தி - அசாம் போலீஸின் நடவடிக்கைக்கு வரவேற்பு!

சமூகவலைத்தளங்களில் பரவும் வதந்தி - அசாம் போலீஸின் நடவடிக்கைக்கு வரவேற்பு!

அசாம் போலீஸின் நடவடிக்கைக்கு வரவேற்பு

அசாம் போலீஸின் நடவடிக்கைக்கு வரவேற்பு

போலிச் செய்திகள் பரவுவது தற்போதைய காலகட்டத்தில் கவலைக்குரிய விஷயங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சமூகவலைதள வதந்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பாடகர் அர்ஜித் சிங் (Arijit Singh)- கின் பாடலை அசாம் காவல்துறை பயன்படுத்தியது வரவேற்பை பெற்றுள்ளது.

பல்வேறு தலைப்புகளில் போலிச் செய்திகள் பரவுவது தற்போதைய காலகட்டத்தில் கவலைக்குரிய விஷயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. சமூகவலைதளங்களில் வரும் போலி தகவல்கள் மற்றும் தவறான கூற்றுகளை பெரும்பாலானோர், அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்யாமல், விரைவாக மற்றவர்களுக்கு பகிர்ந்துவிடுவதை முதல் கடமையாக வைத்துள்ளனர். சமூக அமைத்திக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்.

இத்தகைய செயல்கள் தடுக்கப்பட வேண்டுமென்பதால், இதுகுறித்து இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் அசாம் மாநில காவல்துறையினர், நெட்டிசன்களின் ரசனைக்கு ஏற்ப வீடியோ ஒன்றை தயாரித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது. போலி தகவல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அந்த வீடியோ இணையத்தில் நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதாவது, பாடகர் அர்ஜித் சிங் (Arijit Singh ), 2014 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஹேட் ஸ்டோரி 2 (Hate Story 2) படத்தில் பாடிய “Na fikar, na sharam, na lihaaz aaya (no worries, no shame, no respect) என்ற பாடலை மேற்கோள் காட்டியுள்ளனர். போலிச் செய்தி பரப்புபவர்களுக்கு எந்த பொறுப்பும், கவலையும் கிடையாது, அவர்களுக்கு போலிச் செய்தி பரப்புவதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து அந்த வீடியோவை உருவாக்கியிருக்கிறார்கள்.

போலிச் செய்தி விழிப்புணர்வுக்காக தனது பாடலை கிரியேட்டிவாக அசாம் காவல்துறை இப்படி பயன்படுத்துமென்று அர்ஜித் சிங் கூட நினைத்திருக்கமாட்டார். அந்தளவுக்கு தத்ரூபமாக, விழிப்புணர்வு கருத்துக்கு ஏற்ற வகையில் பாடல் வீடியோ பயன்படுத்தப்பட்டுள்ளது. அசாம் காவல்துறையின் இந்த நடவடிக்கை இணையத்தில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. டிவிட்டரில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், முகநூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரியாக்ஷன்களையும் பெற்றுள்ளது.

Also read... Gold Rate | அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை...  இன்றைய நிலவரம் என்ன?

திரைப்பட பாடலை பயன்படுத்தி நகைச்சுவை கலந்த விழிப்புணர்வை அசாம் காவல்துறை மேற்கொண்டிருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது என இணையவாசிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதற்கு முந்தயை டிவிட்டர் பதிவில் நெட்பிளிக்ஸ் சீரியஸான நார்கோஸ், டைட்டிலைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தி பிடிப்பட்ட குற்றவாளிகளை புகைப்படத்துடன் அசாம் காவல்துறை பதிவிட்டுள்ளது. அம்மாநிலத்தின் திப்ருகர் (Dibrugarh) மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 85 கிராம் போதைப் பொருளை கைப்பற்றினர். சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதுபோன்ற எண்ணற்ற சம்பவங்கள் நடப்பது அங்கு தற்போது இயல்பாகியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: