ஹோம் /நியூஸ் /இந்தியா /

அசாமில் காவல் நிலையத்தை தீவைத்து கொளுத்திய மக்கள் - பெண்கள் உள்பட 20 பேர் கைது

அசாமில் காவல் நிலையத்தை தீவைத்து கொளுத்திய மக்கள் - பெண்கள் உள்பட 20 பேர் கைது

அசாமில் காவல்நிலையம் தீவைப்பு

அசாமில் காவல்நிலையம் தீவைப்பு

சம்பந்தப்பட்ட நிலைத்தில் விசாரணை கைதி மரணம் அடைந்த ஆத்திரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

அசாம் மாநிலம் நகோவான் பகுதியில் உள்ள பதாத்ரபா காவல்நிலையத்தை அப்பகுதி மக்கள் சிலர் தீ வைத்து கொளுத்தியுள்ளனர். மக்களை பாதுகாக்கும் காவல்நிலையத்திற்கே இதுபோன்ற நிலை ஏற்பட்டது பரபரப்பை ஏப்டுத்தியுள்ளது. அந்த காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக் கிழமை சபிகுல் இஸ்லாம் என்ற மீன் வியாபாரி கைது செய்யப்பட்டார். அந்நபர் காவல் விசாரணையின் போது உயிரிழந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினரும் அப்பகுதி மக்களும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தீவைத்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட ஐந்து குடும்பங்களின் வீடுகளை நகோவான் மாவட்ட நிர்வாகம் புல்டோசர் கொண்டு இடித்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அசாம் காவல் டிஜிபி கூறுகையில்,உள்ளூர் வாசிகள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்து இந்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் அடக்கம். இந்த தாக்குதல் உணர்ச்சியால் திடீரென்ற நடைபெற்றது என கருத்தில் கொள்ள முடியாது. திட்டமிடப்பட்டு நடைபெற்ற தாக்குதலாகும். இந்த தாக்குதல் குறித்த முழு ஆதாரத்தையும் திரட்டி வருகிறோம். குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. அதேவேளை, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அலட்சிய போக்கில் ஈடுபட்ட காவலர்களும் யாரும் தப்ப முடியாது என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்கினால் அதிக வருமானம் உள்ளவர்- இந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வை விளக்கும் ஆய்வறிக்கை

கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் பெண்கள். இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அங்கு சட்டம் ஒழுங்கு கவனத்துடன் கண்காணிக்கப்பட்டுவருகிறது.

First published:

Tags: Assam, Police station