தாலிபான்களுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவு- 14 பேரை கைது செய்த அசாம் காவல்துறை

தாலிபான்கள்

தாலிபான்களுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பதிவிட்ட 14 பேரை அசாம் காவல்துறை கைதுசெய்துள்ளது.

  • Share this:
    ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் வெளியேற்றத்துக்கு பின்னர் அரசுப் படைகளை ஒரு பொருட்டாகவே மதிக்காத தாலிபான்கள் வெறும் சில நாட்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றி உலக அரங்கை அதிரச் செய்திருக்கின்றனர். அங்கு போர் நிறைவுக்கு வந்த போதிலும் பதற்றம் குறைந்தபாடில்லை. கடந்த சில நாட்களாக உலகம் முழுதுமே தாலிபான்கள் குறித்த பேச்சாகத்தான் இருந்து வருகிறது.

    ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகளுக்கு முன்னர் தாலிபான்கள் ஆட்சி செய்தபோது மிக அதிக அளவில் ஒடுக்குமுறைகள் இருந்தன. பொதுவெளியில் மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் இருந்தன. குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க, வேலை செய்ய உரிமைகள் மறுக்கப்பட்டன. தாலிபான்கள் ஆட்சிகள் பெண்களுக்கு எதிரான கடுமையான ஒடுக்குமுறைகள் இருக்கும் என்று அந்நாட்டு பெண்களை அச்சத்தை வெளிப்படுத்திவருகின்றன.


    எனவே, உலக நாடுகள் பலவும் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தது குறித்து அதிருப்தி தெரிவித்துவருகின்றன. இந்தியாவும் தாலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. இருப்பினும், சில குழுக்கள் தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வும் அங்காங்கு நடைபெறுகிறது. தாலிபான்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்துக்காக போராடுகிறார்கள் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஷபிக்குர் ரஹ்மான் பர்க் தெரிவித்திருந்தார். இது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவர் மீது உத்தரப் பிரதேச காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுமட்டுமின்றி தலிபான்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தாக புகாரில் சில மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அசாம் காவல்துறைத் தலைவர் ட்விட்டர் பதிவில், ‘நம்முடைய சட்டங்களுக்கு எதிரான வகையில் தாலிபான்கள் செயல்பாடுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட 14 பேரை அசாம் காவல்துறை கைது செய்துள்ளது. குற்ற வழக்குகளைத் தவிர்க்கும் வகையில் சமூக வலைதள பதிவுகளை பதிவிடுதல் கவனமாக இருக்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published: