Home /News /national /

திரும்ப பெறப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்.. வடகிழக்கில் அமைதி திரும்புமா?

திரும்ப பெறப்பட்ட ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்.. வடகிழக்கில் அமைதி திரும்புமா?

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா

அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் பல பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

    தீவிரவாத குழுக்கள் அமைதி பாதைக்கு திரும்ப வேண்டும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

    வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நடைமுறையில் உள்ளது. இதன்படி எந்தவொரு நபரையும் குழுக்களையும் விசாரணையின்றி கைது செய்யும் உரிமை பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தால் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் ஆயுத குழுக்கள் தலைதூக்கின.

    இதையும் படிங்க - சீனா தாக்கினால் ரஷ்யா உதவிக்கு வராது: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை...

    இந்த நிலையில் இன்று மிக முக்கிய அறிவிப்பாக நாகலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் பல பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அசாமில் தீவிரவாத குழுக்கள் அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாநில சட்டமன்றத்தில் அவர் பேசியதாவது-

    ஆயுதங்கள் ஏந்தி போராடி வரும் உல்ஃபா மற்றும் அதுபோன்ற திவிரவாத குழுக்கள் அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசு மேற்கொள்ளும் அமைதி நடவடிக்கையில் அவர்கள் இடம்பெற வேண்டும். நாம் ஒன்றாக செயல்பட்டு வலிமை மிக்க மாநிலமாக இந்தியாவிலேயே அசாமை மாற்றிக் காட்டுவோம்.

    இதையும் படிங்க - பிரதமர் மோடியை கொல்ல சதி? 20 கிலோ RDX வெடி பொருளுடன் 20 ஸ்லீப்பர் செல்கள் ஆக்டிவேட் செய்யப்பட்டதாக மிரட்டல் கடிதம்

    ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை வடகிழக்கில் பல பகுதிகளில் மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. இதனால், வடகிழக்கு மாநிலங்கள் புதிய வளர்ச்சியை விரைவில் எட்டும். இதற்காக அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சார்பாக பிரதமர் மோடிக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன்.
    இவ்வாறு அவர் பேசினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Assam

    அடுத்த செய்தி