முகப்பு /செய்தி /இந்தியா / கோர்ட்டுக்கு ஜீன்ஸுடன் வந்த வக்கீல்.. வெளியே அனுப்பிய நீதிபதி!

கோர்ட்டுக்கு ஜீன்ஸுடன் வந்த வக்கீல்.. வெளியே அனுப்பிய நீதிபதி!

மாதிரி படம்

மாதிரி படம்

asam highcourt issue | மனு தாரர் ஒருவருக்காக கோர்ட்டில் ஆஜராக ஜீன்ஸ் பேண்ட்டுடன் வழக்கறிஞர் வந்ததால் நீதிபதி முகம் சுழித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Assam, India

அசாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள உயர்நீதிமன்றத்தில் மகாஜன் என்ற வழக்கறிஞர்  ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு ஒரு ஜாமீன் மனு  தொடர்பான விசாரணைக்கு நேற்று ஆஜராக வந்தார். அதனைப் பார்த்த  நீதிபதி கல்யாண் ராய் சுரானா அதிருப்தி அடைந்தார். உடனடியாக அவர் போலீசை வரவழைத்து அந்த வழக்கறிஞரை நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார். அவர் தரப்பு ஜாமீன் மனு மீதான விசாரணையையும் ஒரு வாரத்துக்கு நீதிபதி கல்யாண் ராய் சுரானா ஒத்தி வைத்தார்.

இது குறித்து அவர் பிறப்பித்த உத்தரவில், " கற்றறிந்த வழக்கறிஞரான பி.கே.மகாஜன், மனுதாரருக்காக ஆஜராக வந்தபோது, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்துள்ளார். எனவே அவரை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே அழைத்துச்செல்ல  வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திப்போடப்படுகிறது" என கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தினை தலைமை நீதிபதி மற்றும் ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் கவனத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று நீதிபதி கல்யாண் ராய் சுரானா உத்தரவிட்டார்.

மேலும், அசாம், நாகாலாந்து, மிசோரம், அருணாசலப் பிரதேச பார் கவுன்சில்களுக்கும் இதுபற்றி தெரிவிக்க ஆணையிட்டார். இந்த சம்பவம் அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: Assam, HighCourt, Lawyers