மசோதா தாக்கல்: அரசு நடத்தும் மதரஸாக்களை பொதுக்கல்வி நிறுவனமாக மாற்ற அசாம் அரசு அதிரடி முடிவு

மதரஸா. | கோப்புப் படம்.

இந்த மசோதா தனியார் மதரஸாக்களை மூடும் நோக்கம் கொண்டதல்ல.

 • Share this:
  அசாம் மாநில அரசு திங்களன்று சட்டப்பேரவையில் மசோதா ஒன்றைத் தாக்கல் செய்தது. இதன்படி அரசு நடத்தும் அனைத்து மதரஸாக்களும் ஒழிக்கப்படும், அவை பொதுக்கல்வி நிறுவனங்களாக மாற்றப்படும் என்று மாநில அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் கூறுகையில், “அனைத்து அரசு மதரஸாக்களையும் பொதுக்கல்வி நிறுவனனக்களாக மாற்றப்பட்டு அரசால் இனி மதரஸாக்கள் நடத்தப்பட மாட்டாது என்ற உறுதியுடன் கல்வி அமைப்பில் மதச்சார்பின்மையைப் புகுத்துவதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.

  மதரஸாக்கள் அனைத்தும் உயர்நிலைக் கல்வி நிறுவனங்களாக மாற்றப்படவுள்ளது. ஆனால் இதற்காக சம்பளம், அலவன்ஸ்கள் உள்ளிட்ட சலுகைகள் எந்த விதத்திலும் குறைக்கப்பட மாட்டாது.

  ஆனால் இந்த மசோதா தனியார் மதரஸாக்களை மூடும் நோக்கம் கொண்டதல்ல.

  இந்த மசோதா அசாம் மதரஸா கல்விச் சட்டம், 1995 என்பதையும், அசாம் மதரஸா கல்விச் சட்டம் 2018 ஆகியவற்றை நீக்க முன்மொழிந்துள்ளது.

  இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் மற்றும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

  ஆனால் ‘எதிர்ப்புகள் பற்றிக் கவலையில்லை, இந்த மசோதாவை நிறைவேற்று அமல்படுத்தியே தீருவோம்’ என்று உறுதியாகக் கூறுகிறா அமைச்சர் சர்மா.

  அசாமில் மொத்தம் அரசு நடத்தும் மதரசாக்கள் எண்ணிக்கை 610 என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: