முகப்பு /செய்தி /இந்தியா / அரசு வேலைக்கான தேர்வு முறைகேட்டை தடுக்க அசாம் அரசு புது யுக்தி!

அரசு வேலைக்கான தேர்வு முறைகேட்டை தடுக்க அசாம் அரசு புது யுக்தி!

அசாமில் இணைய சேவை முடக்கம்

அசாமில் இணைய சேவை முடக்கம்

Internet Suspended in Assam : அசாம் மாநிலத்தின் மிகப் பெரிய தேர்வான அரசு வேலைகளுக்கான இன்று நடைபெறும் தேர்வில் 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், முறைகேடுகளை தவிர்க்க அம்மாநில அரசு புதிய யுக்தியை கையாண்டுள்ளது.

  • Last Updated :
  • Assam | Tamil Nadu

அசாம் மாநிலத்தில் இன்று அரசு வேலைக்கான தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வு நேரத்தின் போது மாநிலம் முழுவதும் இணைய சேவையை முடக்கி வைக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அசாம் மாநிலத்தில் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு சுமார் 27,000 காலி அரசு பணியிடங்களை நிரப்ப இன்று தேர்வு நடைபெறுகிறது.

மாநிலத்தின் மிகப் பெரிய தேர்வான இதில், 14 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், முறைகேடுகளை தவிர்க்க அம்மாநில அரசு புதிய யுக்தியை கையாண்டுள்ளது. இணைய சேவையை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்வு நடைபெறும் 4 மணிநேரம் இணைய சேவையை முடக்கி வைக்க முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா உத்தரவிட்டுள்ளார். மேலும், தேர்வு முறையாக நடத்தி அதில் எந்த குளறுபடியும் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவர்களிடம் ஆன்லைன் மூலம் முதலமைச்சர் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து பல்வேறு தேர்வு மையங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு அறைக்குள் தேர்வர்கள் மட்டுமல்லாது, கண்காணிப்பாளர்களும் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களைக் கொண்டு செல்லக் கூடாது என கறாரான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பசு மாட்டிற்காக 5 பேரை அடித்துக்கொன்றோம்.. பாஜக முன்னாள் எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை!

top videos

    அசாமில் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் ஒரு லட்சம் வேலை வழங்குவதாக பாஜக அரசு வாக்குறுதி தந்திருந்தது. அதை நிறைவேற்றும் விதமாகவே முதல் கட்டமாக 27,000 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்துகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற தேர்வுகளில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால், இம்முறை பல்வேறு கறார் நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த தேர்வு மூன்று கட்டங்களாக இன்று, ஆகஸ்ட் 28, செப்டம்பர் 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

    First published:

    Tags: Assam, Assam government, Internet