Home /News /national /

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை சித்திரவதை... வீடியோ பார்த்து பதறிப்போன அசாம் அரசு மீட்டுச் செல்ல தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானை சித்திரவதை... வீடியோ பார்த்து பதறிப்போன அசாம் அரசு மீட்டுச் செல்ல தீவிரம்

ஜெயமாலா யானையை மீட்க அசாம் அரசு நடவடிக்கை

ஜெயமாலா யானையை மீட்க அசாம் அரசு நடவடிக்கை

Assam Elephant Jaymala | அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் யானை ஜாய்மாலா. இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோவிலில் வைக்கப்பட்டு, அதை அடித்து சித்தரவதை செய்யும் காணொளிகளை விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான PETA ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Assam, India
    அசாமை சேர்ந்த யானை ஒன்று தமிழ்நாட்டின் கோவிலில் சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டு அதை துன்புறுத்தியதாக விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான PETA செய்தி வெளியிட்டிருந்தது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட யானை அசாம் மாநிலத்திற்கு மீட்டு வர அசாம் அரசு நீதிமன்றத்தை நாடியுள்ளது.

    அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் யானை ஜாய்மாலா. இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோவிலில் வைக்கப்பட்டு, அதை அடித்து சித்தரவதை செய்யும் காணொளிகளை விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான PETA ட்விட்டரில் பதிவிட்டிருந்தது. யானை 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கோயிலில் இருப்பதாக தகவல் கூறப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் யானைகள் பல்வறு மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படுகின்றன. ஜாய்மாலா யானை விவகாரம் அசாம் மாநிலத்தின் பல்வேறு ஊடகங்களிலும் பரபரப்பு செய்தியாக பதிவான நிலையில், அம்மாநிலத்தின் தலைமை வன பாதுகாப்பு அலுவலர் பாதிக்கப்பட்ட யானையை சட்ட ரீதியாக நீதிமன்றம் மூலம் அனுகி அசாமிற்கு கொண்டு வரும் முயற்சி எடுக்கப்படும் என்றார்.

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசை அனுகிய போது, அதில் நிர்வாக முறைப்படி சில இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது. யானையை தமிழ்நாடு வனத்துறையின் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதன் பின்னரே அசாம் அரசு அவர்களிடம் இருந்து வாங்க முடியும். இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.


    எனவே, நீதிமன்றத்தின் மூலம் ஜாய்மலாவை நிச்சயம் திருப்பி அழைத்து வந்து, யானையை சுதந்திரமாக வாழ வைப்போம் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: பொதுவெளியில் சுய இன்பத்தில் ஈடுபட்ட 60 வயது நபர்.. போக்சோ சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறை!

    மேலும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழு யானையை வந்து ஆய்வு செய்ய அம்மாநில முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழு ஜாய்மலாவை மட்டுமல்லாது தமிழ்நாட்டில் உள்ள அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 8 யானைகளை ஆய்வு செய்யவுள்ளது. ஆய்வில் யானைகள் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தால், அவற்றை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Assam, Elephant, Temple

    அடுத்த செய்தி