ஹோம் /நியூஸ் /இந்தியா /

'அது ஒரு கொலை'.. முதலமைச்சர் வாட்ஸ் அப்க்கு வந்த முக்கிய தகவல்.. வெளிச்சத்துக்கு வந்த சிறுமியின் மரணம்!

'அது ஒரு கொலை'.. முதலமைச்சர் வாட்ஸ் அப்க்கு வந்த முக்கிய தகவல்.. வெளிச்சத்துக்கு வந்த சிறுமியின் மரணம்!

அசாம் முதல்வர்

அசாம் முதல்வர்

சிறுமி மரணத்திற்கு உண்மையான காரணம் அறிந்த நிருபர் ஒருவர், அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Assam, India

  அசாமின் தர்ராங் மாவட்டத்தில் 13 வயது பழங்குடியின சிறுமியின் கொலையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர ஒரு வாட்ஸ்அப் செய்தி உதவியுள்ளது.

  கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்தியின் மூலம் மூடி மறைக்கப்பட்ட ஒரு பாலியல் வன்கொடுமை - கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

  நேபாளம், பூடான் எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டு வரும் மத்திய படைகளில் ஒன்றான சசாஸ்த்ரா சீமா பல் படையில் (எஸ்எஸ்பி) அசாமின் சோனிட்பூர் மாவட்டம், துலா கிராமத்தை சேர்ந்த கிருஷ்ண கமல் என்பவர் பணியாற்றி வந்தார். அவரது வீட்டில் பணிப் பெண்ணாக 13 வயது பழங்குடியின சிறுமி வேலை செய்து வந்துள்ளார்.

  இதையும் படிங்க: தினமும் 2-3 கிலோ வசைகளை சாப்பிடுகிறேன்'' கிண்டலடித்த பிரதமர் மோடி!

  கடந்த ஜூன் 11-ம் தேதி அவரது வீட்டில் அச்சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக வழக்கு முடிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்தது வேறு.

  சிறுமி மரணத்திற்கு உண்மையான காரணம் அறிந்த நிருபர் ஒருவர், அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார். பல ஆயிரக்கணக்கான செய்திகளில் இதை முதலில் ஏதோ போலியான செய்தி என்று நினைத்தனர். ஆனால் எதற்கும் ஒரு முறை விசாரிக்க நினைத்த முதல்வரின் உத்தரவின்பேரில் சிறுமியின் தற்கொலை வழக்கை சிஐடி போலீஸார் மீண்டும் விசாரித்தனர்.

  அதில், சிறுமி தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்பது தெரியவந்தது. கொலையை மறைக்க போலீஸ் அதிகாரிகள் முதல் நீதிபதி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டு, அவர்களின் உதவியால் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு முடித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்பு கொலையாளி கிருஷ்ண கமலை கைது செய்தனர்.

  இதையும் பாருங்க: மகளுக்கு திருமணம்.. மனமெல்லாம் மகிழ்ச்சி.. சிரித்த முகத்தோடு ட்ரம்ப்.! கல்யாண க்ளிக்ஸ்!

  கொலையை மறைக்க உதவிய அதிகாரிகள். லஞ்சம் பெற்றுக் கொண்டு கொலை வழக்கை, தற்கொலை வழக்காக மாற்றிய நீதிபதி உட்பட அனைவரும் சஸ்பென்ட் செய்யபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

  மேலும் அசாமில் சந்தேகத்துக்குரிய அனைத்து வழக்குகளிலும் மறு விசாரணை நடத்த முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா உத்தரவிட்டு உள்ளார்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Child murdered, Girl Murder