அசாமில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
அசாமில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 20 மாவட்டங்களில் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

A partially submerged house is seen at the flood-affected Mayong village in Morigaon district, in the northeastern state of Assam. (REUTERS)
- News18 Tamil
- Last Updated: July 13, 2020, 5:19 PM IST
வடகிழக்கில் உள்ள அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து மாநிலங்களில் ஒருவாரமாக கனமழை வெளுத்துவாங்குகிறது. அசாம் மாநிலம், இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
புதிமாரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், தங்களது கிராமங்களை காலி செய்துவிட்டு வெளியேறிவருகின்றனர். கர்பிலாங்பி நீர்மின் நிலையத்தில் இருந்து முன்னறிவிப்பின்றி தண்ணீரைத் திறந்ததால் வெள்ளம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த முறை ஏற்பட்ட வெள்ளத்தில் காஸிரங்கா தேசிய பூங்காவில் 41 விலங்குகள் உயிரிழந்த நிலையில், தற்போது 70% நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால், காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகள் இடம்பெயரத் தொடங்கியுள்ளன. Also see:
பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுவதால் திப்ருகர், ஜோர்ஹட் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தின்சுகியா மாவட்டம் பக்ஜான் பகுதி எண்ணெய் வயலில் ஏற்பட்ட விபத்தால் கடந்த 44 நாட்களாக தீ எரிந்துவரும் நிலையில், அப்பகுதியை வெள்ளம் சூழ்ந்ததால், உட்புறத்தில் எரியும் தீயை அணைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
1,109 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்த நிலையில் மீட்புப் பணிகளிலும் தொய்வு நிலவுகிறது. இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 1 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 200க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புதிமாரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், தங்களது கிராமங்களை காலி செய்துவிட்டு வெளியேறிவருகின்றனர். கர்பிலாங்பி நீர்மின் நிலையத்தில் இருந்து முன்னறிவிப்பின்றி தண்ணீரைத் திறந்ததால் வெள்ளம் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த முறை ஏற்பட்ட வெள்ளத்தில் காஸிரங்கா தேசிய பூங்காவில் 41 விலங்குகள் உயிரிழந்த நிலையில், தற்போது 70% நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால், காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகள் இடம்பெயரத் தொடங்கியுள்ளன.