பாஜக எம்.எல்.ஏ. காரில் EVM இயந்திரங்கள்: ரதாபாரி தொகுதி வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவு

ஈவிஎம் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட கார்.

அசாம் தேர்தலில் தற்போது சூறாவளியைக் கிளப்பியுள்ள விவகாரமான பதர்கண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்ணேந்து பால் காரில் ஈவிஎம் இயந்திரங்கள் இருந்ததாகக் கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து 4 அதிகாரிகளை இடைநீக்கம் செய்த தேர்தல் ஆணையம் ரதாபாரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  அசாம் தேர்தலில் தற்போது சூறாவளியைக் கிளப்பியுள்ள விவகாரமான பதர்கண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்ணேந்து பால் காரில் ஈவிஎம் இயந்திரங்கள் இருந்ததாகக் கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து 4 அதிகாரிகளை இடைநீக்கம் செய்த தேர்தல் ஆணையம் ரதாபாரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

  போக்குவரத்து தேர்தல் கட்டுப்பாடுகளை மீறியதாக தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஈவிஎம் இயந்திரங்களின் சீல் ஒன்றும் ஆகாமல், உடைக்கப்படாமல் இருந்தாலும் ரதாபாரி (எஸ்.சி) தொகுதியில் இந்திரா எம்.வி.ஸ்கூல் நம்பர் 149 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு நோக்கரிடமிருந்து அறிக்கையும் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

  அசாமில் கரீம்கஞ்ச் பகுதியில் பாஜக வேட்பாளர் ஒருவர் காரில் வாக்களிக்கும் இயந்திரமான ஈவிஎம் இயந்திரங்கள் இருந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் 4 தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது.

  இதனைத் தொடர்ந்து கரீம்கஞ்ச் பகுதி தேர்தல் அதிகாரியிடமிருந்து விளக்க அறிக்கை கேட்டுள்ளது தேர்தல் ஆணையம். அசாமில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவுகள் நடந்து வரும் வேளையில் பாஜக எம்.எல்.ஏ. கார் ஒன்றில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பல இருப்பது சமூக ஊடகங்களில் வீடியோவாகப் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  கார் பதிவு எண் AS 10B 0022 இந்தக் கார், பாஜக வேட்பாளர் கிருஷ்ணேந்து பால் என்பவருடையது என்பதும் தெரியவந்தது. அசாம் பத்திரிகையாளர் ஒருவர் இந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கதில் பதிவிட அது வைரலாகப் பரவியது, தீயாக பரபரப்பு ஏற்படுத்தியது.

  தேர்தல் மாநிலங்களில் ஈவிஎம்கள் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பியபடியேதான் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காண்டி இந்த வைரல் வீடியோவை பகிர்ந்து தேர்தல் ஆணையம் இனியாவது விழிப்பாக இருக்குமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

  தேர்தல் ஆணையம் என்ன கூறுகிறது?

  ஏப்ரல் 1ம் தேதி வேட்பாளர் ஒருவரின் கார் இரவு 9 மணியளவில் பழுதடைந்தது. செக்‌ஷன் ஆபீசர் மாற்று ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்தும் இல்லை நாங்கள் ஏற்பாடு செய்து கொள்கிறோம் ஏனெனில் வாக்களிகப்பட்ட ஈவிஎம் தங்கள் கையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் .அப்பொது அந்த வழியே வந்த கார் யார், என்னதென்று தெரியாமல் ஈவிஎம் இயந்திரங்களை அதில் ஏற்றியுள்ளனர். அந்த வாகனம்தான் கிருஷ்ணேந்து பால் என்ற பாஜக நபருடையது.

  அப்போது அங்கு சேர்ந்த கூட்டம் தாக்கத் தொடங்கியது காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன, இதில் கரிம் கஞ்ச் எஸ்பி, காயமடைந்தார்.

  இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த அசாம் காங்கிரஸ், “பாஜக எப்போதும் தேர்தலை களவாட முயலும்” என்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்று காங்கிரஸ் படையே இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

  இந்நிலையில்தான் அந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுளது.
  Published by:Muthukumar
  First published: