Assam Election Result | அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி: மகிழ்ச்சியின் உச்சத்தில் முதல்வர் சோனோவால்

அசாம் முதல்வர்

அசாமில் 126 சட்டபேரவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சமீபத்திய நிலவரப்படி பாஜக 78 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியமைக்கத் தயாராகி வருகிறது. காங்கிரஸ் 47 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

  • Share this:
    அசாமில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது, இதனையடுத்து முதல்வர் சர்பானந்த சோனோவால் மகிழ்ச்சித் துள்ளலில் உள்ளார்.

    அசாமில் 126 சட்டபேரவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சமீபத்திய நிலவரப்படி பாஜக 78 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியமைக்கத் தயாராகி வருகிறது. காங்கிரஸ் 47 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

    அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏற்கெனவே 2 கட்டத் தேர்தல்கள் கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி நடந்து முடிந்துவிட்டன. 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இந்த தேர்தலில் பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜகவின் நீண்ட நாள் கூட்டாளியான போடோலேண்ட் மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் இணைத்துக்கொண்டது காங்கிரஸ்.

    மேலும் இந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாக்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, அன்சாலிக் கனமார்ஷா போன்ற கட்சிகளும் காங்கிரஸ் அணியில் இணைந்தன.

    சிஏஏ உள்ளிட்ட சட்டங்களால் கடும் எதிர்ப்பு எழுந்தநிலையில் ஆளும் பாஜகவுக்கு தேர்தலில் கடும் சவால் ஏற்பட்டது. எனினும் இந்த தேர்தலில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டியே காணப்பட்டது. அசாமில் வங்காள தேசத்திலிருந்து வந்த இந்துக்களின் வாக்கு வங்கிதான் பாஜகவின் சொத்தாகும்.

    இந்நிலையில் வெற்றி வாகை சூடும் பாஜக முதல்வர் சர்பானந்தா சோனோவால் மகிழ்ச்சி தெரிவிக்கையில், “‘‘அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியைமக்கும் சூழல் உருவாகியுள்ளது. மக்கள் பெருமளவு எங்களுக்கு ஆதரவு தரும் நிலை காணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையும் போது பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும். இதற்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி’’ எனக் கூறினார்.

    5 மாநில தேர்தலில் அசாமில் மட்டும்தான் பாஜகவுக்கு தோதான, மகிழ்ச்சியான தேர்தல்முடிவுகள் கிடைத்துள்ளது, தமிழகம், கேரளா, மேற்கு வங்கத்தில் பாஜக தோல்வி முகம் காட்டி வருகிறது. புதுச்சேரியில் என்.ஆர்.சி 11 இடங்களிலும் காங்கிரஸ் 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
    Published by:Muthukumar
    First published: