• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மினி ஷார்ட்ஸ் அணிந்து நுழைவுத்தேர்வு எழுத வந்த மாணவிக்கு அனுமதி மறுப்பு!

மினி ஷார்ட்ஸ் அணிந்து நுழைவுத்தேர்வு எழுத வந்த மாணவிக்கு அனுமதி மறுப்பு!

ஷார்ட்சில் தேர்வு எழுத வந்த மாணவி

ஷார்ட்சில் தேர்வு எழுத வந்த மாணவி

மாணவியின் தந்தை கூறுகையில், அதிகாரிகள் எனது மகளுக்கு அநீதி இழைத்துவிட்டனர் என கூறினார்.

  • Share this:
ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு நுழைவுத்தேர்வு எழுத வந்த மாணவியை பார்த்த தேர்வுத் துறை அலுவலர்கள் அதிர்ந்துள்ளனர். அவருக்கு திரைச்சீலை கொடுத்து அணிந்து வருமாறு பணித்துள்ளனர்.

மாணவி ஒருவர் விவசாயப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை எழுதுவதற்காக, அரைக்கால் ஆடையான ஷார்ட்ஸ் அணிந்து வந்ததால் அவரை தேர்வு எழுத அனுமதி மறுத்துள்ளனர் தேர்வுத்துறை அலுவலர்கள்.

பொதுவாக கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில பல்கலைக்கழக தேர்வுகளிலும் ஆடைக் கட்டுப்பாடு அவசியம் என குறிப்பிடப்படுகின்றன. ஆனால் ஆடைக் கட்டுப்பாடு குறிப்பிடாததால் ஷார்ட்ஸ் அணிந்து தேர்வு எழுத வந்திருக்கிறார் மாணவி ஒருவர்.

அசாம் மாநிலம் டெஸ்பூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்த ஆண்டுக்கான விவசாய படிப்புக்காக விண்ணப்பித்திருந்தார். அவருக்கு பொது நுழைவுத்தேர்வுக்கான அழைப்பு கிடைத்தது. அவருக்கான ஒதுக்கீட்டின்படி டெஸ்பூரில் உள்ள கிரிஜானந்தா சவுத்ரி மருந்தியல் அறிவியல் கல்லூரி தேர்வு மையமாக கிடைத்தது.

Also Read:  பயன்படுத்திய போர்டு கார் வாங்குவது நல்லதா?

இந்நிலையில் தேர்வு எழுதுவதற்கான தேர்வு மையத்துக்கு சென்ற அந்த மாணவி ஷார்ட்ஸ் அணிந்தவாறு கேஷுவலாக சென்றதை பார்த்த தேர்வு நடத்தும் அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர். பின்னர், ஷார்ட்ஸில் வந்திருப்பதால் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க முடியாது என தேர்வு எழுத இயலாத சூழலை அந்த மாணவிக்கு சொல்லி இருக்கின்றனர்.

இதனிடையே, மாணவி தனது தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்தவற்றை விளக்கியிருக்கிறார். அவரும் தனது மகளுக்கு முழுக்கால் சட்டையை வாங்கி வருவதற்காக சென்றார். இதனிடையே கல்லூரியில் இருந்த ஜன்னலுக்கு பயன்படுத்தப்படும் திரைச்சீலையை எடுத்து வந்த தேர்வு மைய அதிகாரிகள், இதனை அணிந்து வருமாறு கூறியிருக்கின்றனர்.

மாணவியும் அந்த திரைச்சீலையை அணிந்து வரவே, பின்னர் அவர் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு தேர்வு எழுதிச் சென்றுள்ளார்.

Also Read: ஒரே நாளில் ரூ.600 கோடிக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை; ஓலா நிறுவனம் புதிய புரட்சி!

இதன் பின்னர் மாணவி கூறுகையில், தேர்வு எழுதுவதற்கு சிறிது நேரம் முன் வேண்டுமென்றே தேர்வு மைய அதிகாரிகள் தனக்கு அழுத்தம் தந்ததாகவும், இதுவும் ஒருவகையான துன்புறுத்தல் தான் என்றார். ஹால் டிக்கெட்டில் ஆடைக் கட்டுப்பாடு குறித்து எதுவும் கூறவில்லை பின்னர் ஏன் என்னை தேர்வு எழுத அனுமதி மறுக்கவேண்டும் என கேள்வி எழுப்பினார்.

இது குறித்து மாணவியின் தந்தை கூறுகையில், அதிகாரிகள் எனது மகளுக்கு அநீதி இழைத்துவிட்டனர் என கூறினார்.

இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. மாணவிக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: