ஹோம் /நியூஸ் /இந்தியா /

காண்டாமிருகத்தை அடித்துத் தூக்கிய லாரி! வருத்தம் தெரிவித்த முதலமைச்சர்!

காண்டாமிருகத்தை அடித்துத் தூக்கிய லாரி! வருத்தம் தெரிவித்த முதலமைச்சர்!

காண்டாமிருத்தின் மீது மோதிய லாரி

காண்டாமிருத்தின் மீது மோதிய லாரி

அசாம் காசிரங்கா உயிரியல் பூங்கா பகுதியில் காண்டாமிருகம் சாலையை கடக்க முயன்ற போது, குறுக்கே ஒரு லாரி வேகமாக வந்து அதன் மீது மோதியது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Assam, India

  அசாம் மாநிலத்தில் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்கா உள்ளது. நாட்டின் முன்னணி உயிரியல் பூங்காவான காசிரங்கா ஐநா சபையின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட பகுதியாகும்.

  இங்குள்ள உயிரினங்களை, விலங்குகளை பேரிடர், மனித விலங்கு மோதல், வேட்டை போன்ற பிரச்சனையில் இருந்து பாதுகாக்க அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மனித விலங்கு மோதல் என்ற பிரச்னை தொடர்ந்து நிலவிய வண்ணம் தான் உள்ளது. இதை சுட்டிக்காட்டும் விதமாக அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

  காசிரங்கா பூங்க பகுதியைச் சேர்ந்த தேசிய நெடுஞ்சாலையை அங்கு வாழும் காண்டாமிருகம் ஒன்று கடக்க முயற்சி செய்தது. அது சாலையை கடக்க முயன்ற போது, குறுக்கே ஒரு லாரி வேகமாக வந்து அதன் மீது மோதியது. ஆனால், நல்லவேளையாகக் காண்டாமிருகமும் சுதாரித்து நகர்ந்துவிட்டதால் லேசான மோதலுடன் எந்த பாதிப்பும் இன்றி தப்பி காட்டுக்குள் ஓடிவிட்டது. இது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

  இதையும் படிங்க: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவசமாக சென்று வரலாம்.. அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி!

  இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா," காண்டாமிருகம் நமது சிறந்த நண்பர்கள். அவர்களின் இடத்தில் எந்த ஊடுருவலையும் மேற்கொள்ள நாம் அனுமதிக்க மாட்டோம். நல்ல வேளையாக விலங்கு உயிர்பிழைத்தது. வாகனத்தை பிடித்து ஓட்டுநருக்கு அபராதம் விதித்தோம். இது போன்ற சம்பவங்கள் தவிர்ப்பதற்காக இந்த வனப்பகுதியில் 32 கிமீ நீளத்திற்கு சுரங்க சாலை அமைக்கப்படும்" என்றுள்ளார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Assam, Viral Video