பொதுவாக கார் பிரியர்கள் மத்தியில் ஆடம்பரக் கார்கள் மீதான மோகம் எப்போதுமே இருக்கும். ஆனால் வருவாய்க்கு ஒத்துப்போகாததால் தனது பட்ஜெட் காரையே ஆடம்பரக் காராக மாற்றி வடிவமைப்பதை சிலர் செய்வார்கள். இதற்காகவே கைதேர்ந்த கார் மெக்கானிக்களும் உள்ளனர். அப்படித்தான் அசாமைச் சேர்ந்த கார் மெக்கானிக் ஒருவர் பட்ஜெட் ரக மாருதி கார் ஒன்றை ஆடம்பர லாம்போகினி காராக டிசைன் செய்து மாற்றி அதை முதலமைச்சருக்கே பரிசாக தந்து அசத்தியுள்ளார்.
அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கார் மெக்கானிக் நூருல் ஹக். சாதாரண பட்ஜெட் கார்களை விலை உயர்ந்த கார்களாக மாற்றி அமைப்பதில் இவர் வல்லவர். அப்படித்தான் இவர் அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மாவுக்கு மாருதி காரை லாம்போகினி கார் போல வடிவமைத்து பரிசளித்துள்ளார்.
லாம்போகினி காரில் உள்ளதைப் போலேவே முகப்பு, பாடி, இருக்கை என மொத்த டிசைனையும் மாற்றியுள்ளார். நூருலின் திறமையை பாற்றி அசந்து போன முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா வெகுவாக பாராட்டியுள்ளார். நூருல் ஹக்கின் வடிவமைப்பு மிகச் சிறப்பாக உள்ளது. புதுப்பொலிவு பெற்ற காரில் அமர்ந்து பார்த்த போது மெய்சிலிர்த்துப் போனேன் என்று பாராட்டியுள்ளார். இந்த காரை டிசைன் செய்ய ரூ.10 லட்சம் செலவானதாகக் கூறிய நூருல் அடுத்து, ஒரு பட்ஜெட் காரை பெராரியாக வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
முதலமைச்சருக்கு இந்த காரை வடிமைக்க நான்கு மாதங்கள் எடுத்துக்கொண்டதாக நூருல் கூறினார். நூருலின் திறமைக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக கார் பிரியர்கள் பலரும் நூருலின் கார்களை ஆர்வத்துடன் பார்த்து பாராட்டி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.