சாலை வசதி இல்லாத ஊரில் கொரோனா பாதித்து ஆக்ஸிஜன் குறைந்தவரை சைக்கிளில் ஒரு கி.மீ அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் - நெகிழ்ச்சி சம்பவம்

மாதிரிப் படம்

அசாமில் சாலை இல்லாத ஊரில் கொரோனா பாதித்தவரை சைக்கிளில் வைத்து ஒரு கி.மீ தூரம் அழைத்துவந்து ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  அசாமில் அவசர ஊர்தி செல்ல முடியாத கிராமத்தில் ஆபத்தான நிலையில் இருந்த கொரோனா தொற்றாளரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் அழைத்து வந்து அவசர ஊர்தி ஓட்டுநரும், சுகாதார பணியாளரும் பத்திரமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

  கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை சுனாமி போல தாக்கி மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து வெளிவர முடியாமல் திணறிவந்தன. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்த பதிவானது. தற்போது தான் கொரோனா இரண்டாவது அலையின் வீரியம் குறையத் தொடங்கியுள்ளது. இந்தக் இக்கட்டான காலக்கட்டத்தில் முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சுகாதாரப் பணியாளர்கள்தான் போரின்போது முன்நிற்கும் போர்வீரர்கள் போல நின்று மக்களைக் காத்துவருகின்றனர். பல இடங்களில் அவர்களது உயிரைப் பணயம் வைத்து மக்கள் உயிரைக் காத்த செய்திகளை அறிய முடிகிறது. ஓய்வின்றி உழைப்பது, ஆம்புலன்ஸிலேயே படுத்து உறங்குவது என ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் அர்பணிப்பு கணக்கிலடங்காதது. அதேபோல ஒரு சம்பவம் தற்போதும் நடைபெற்றுள்ளது.

  அசாம் மாநிலம் கசார் மாவட்டம் டெலிசோரா கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை அழைத்து வர அவசர ஊர்தி சென்றது. ஆனால் மோசமான சாலை காரணமாக ஊருக்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாகவே அவசர ஊர்தி நிறுத்தப்பட்டது.

  அதேநேரம் தொற்றால் பாதிக்கப்பட்டவரின் ஆக்சிஜன் அளவு 89 விழுக்காடாக குறைந்த நிலையில், வேறு வழியின்றி அவசர ஊர்தி ஓட்டுநர் இஸ்லாம் உத்தின் லஸ்கரும், சுகாதார பணியாளர் ஜெய்னூர் அலியும் பாதுகாப்பு கவச உடையுடன் நடந்தே கிராமத்தை அடைந்துள்ளனர். தொற்றாளரால் நடக்க முடியாத நிலையில் மிதிவண்டியில் அவரை அமர வைத்து அவசர ஊர்தி இருக்கும் இடம் வரை மெதுவாக அவரை அழைத்து வந்துள்ளனர்.

  சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவசர ஊர்தியில் ஏற்றப்பட்ட அவர் சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: